அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு விவகாரத்தில் தம்பதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு விவகாரத்தில் தம்பதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
Updated on
1 min read

புதுடெல்லி: அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த தம்பதி 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த 20ம் தேதி பழுது பார்ப்பு வேலையின் போது ஏற்பட்ட தூசியால் கீழ் வீட்டில் வசிக்கும் ஹர்ஷ் சிங், அவரது மனைவி ரூபி ஜெயின் ஆகியோருடன் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் ஹர்ஷ் சிங், ரூபி ஜெயின் ஆகியோர் அப்பெண்களை இன ரீதியாக அவமதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் மாளவியா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மார்ச் 11 வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு விவகாரத்தில் தம்பதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in