அமைதியை சீர்குலைக்க சதி: சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு

சுக்பீர் சிங் பாதல்

சுக்பீர் சிங் பாதல்

Updated on
1 min read

நான்டெட்: சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகருக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.

அப்போது, பிற்பகலில் அங்குள்ள குருத்வாரா மாதா சாஹிப் தேவான் ஜி முகத் பகுதியில் சென்று கொண்டிருந்த சுக்பீர் சிங்கை ஒருவர் கத்தியால் தாக்கினார். அப்போது, அவரது மனைவியும், அகாலி தளம் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதலும் உடன் இருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜஸ்பால் சிங் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாக்குதலில் காயம் அடைந்த பாதலுக்கு சுமார் 90 நிமிடங்கள் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து நேற்று வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பாதல் கூறியதாவது:

வரும் 2027-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பஞ்சாபின் அரசியல் மற்றும் சமூக சூழலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுமே தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் ஆகும்.

அகாலி தளத்தின் தலைவராக இருக்கும் நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பஞ்சாபின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு சிரோமணி அகாலி தளம் அஞ்சாது. அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்காது. இவ்வாறு பாதல் கூறினார்.

<div class="paragraphs"><p>சுக்பீர் சிங் பாதல்</p></div>
சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கு ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in