

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடை பெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து 294 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 284 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதன்படி, கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில், பிரதிப் பிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். இதுபோல முன்னாள் எம்.பி.மவுசம் நூர் மலாட்டிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.