காங். கட்சியின் நன்கொடை வருவாய் 75% சரிவு: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

காங். கட்சியின் நன்கொடை வருவாய் 75% சரிவு: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
Updated on: 
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்​சிக்கு ரூ.20,000-க்கு மேல் வழங்​கப்​பட்ட நன்கொடை 2025-26-ம் நிதி​யாண்​டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 75% சரிந்து ரூ.130.69 கோடி​யாகக் குறைந்துள்ளது. தேர்​தல் ஆணை​யத்​தில் அக்​கட்சி தாக்​கல் செய்துள்ள அறிக்கை​யில் இந்த தகவல் தெரியவந்​துள்​ளது.

இதற்கு முந்​தைய 12 நிதி​யாண்​டுகளின் புள்ளி விவரங்​களு​டன் ஒப்​பிடும்​போது, கடந்த 2015-16-ம் நிதி​யாண்​டில் காங்​கிரஸ் கட்​சி​யின் நன்​கொடை முந்​தைய ஆண்​டின் ரூ.141.46 கோடி​யி​லிருந்து சுமார் 86% சரிந்​தது. தற்​போதைய சரிவுக்கு முன்​னதாக, தொடர்ந்து இரண்டு ஆண்​டுகள் நன்​கொடை வசூல் அதிகரித்திருந்​தது. 2023-24ம் நிதி​யாண்​டில் ரூ.281.48 கோடி​யாக இருந்த நன்கொடை வசூல், மக்​களவைத் தேர்​தல் நடை​பெற்ற 2024-25ம் நிதி​யாண்​டில் ரூ.517.39 கோடி​யாக உயர்ந்​தது.

2024-25-ம் நிதி​யாண்​டில் பாஜகவுக்கு ரூ.20,000 -க்கு மேல் வழங்​கப்​பட்ட நன்​கொடை மூலம் ரூ.6,074.02 கோடி கிடைத்​தது. இது காங்​கிரஸைவிட 12 மடங்கு அதி​கம்.

2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பாஜக​வின் நன்​கொடை விவரங்​கள் இன்​னும் தேர்​தல் ஆணை​யத்​தால் வெளி​யிடப்​பட​வில்லை. ஆய்வு செய்​யப்​பட்ட 12 நிதி​யாண்​டுகளி​லும் பாஜக​வின் நன்​கொடை வசூல் காங்​கிரஸைவிட அதி​க​மாகவே இருந்​துள்​ளது.

காங்​கிரஸ் கட்​சி​யின் நன்​கொடை வரு​வாய் சரிவுக்கு புரூடன்ட் தேர்​தல் அறக்​கட்​டளை மூலம் கிடைத்த நிதி கணிச​மாகக் குறைந்​ததும் முக்​கிய காரண​மாகும். இந்த அறக்​கட்​டளை 2024-25ம் நிதி​யாண்​டில் காங்​கிரஸுக்கு ரூ.216.34 கோடி வழங்​கி​யிருந்​தது. ஆனால், 2025-26-ம் நிதி​யாண்​டில் இந்​தத் தொகை ரூ.25 கோடி​யாகக் குறைந்​துள்​ளது.

காங்​கிரஸ் கட்​சி​யின் சமீபத்​திய நன்​கொடை அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்ள ஒரே தேர்​தல் அறக்​கட்​டளை புரூடன்ட் மட்​டுமே. மற்ற முக்​கிய நன்​கொடை​யாளர்​களில் ஸ்​டார் சிமென்ட் நிறு​வனம் ரூ.5 கோடியும், சஜ்​ஜன் பஜாஜ்கா ரூ.4 கோடியும், பிரேம் குமார் பஜாஜ்கா ரூ.2 கோடியும் வழங்​கி​யுள்​ளனர் என, இந்​திய தேர்​தல் ஆணை​யத்​திடம், காங்​கிரஸ் அறிக்​கை​ தாக்கல் செய்துள்்​ளது.

காங். கட்சியின் நன்கொடை வருவாய் 75% சரிவு: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
சென்னை அண்ணா நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: புத்தக கொள்முதல் முறைகேட்டால் அரசு நடவடிக்கை

X