பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை பதவி நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை பதவி நீக்க அயலக காங். வலியுறுத்தல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி​யதற்​காக சாம் பிட்ரோ​டாவை பதவியி​லிருந்து நீக்க வேண்​டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அயலக இந்​திய காங்கிரஸ் தலை​வர் சாம் பிட்ரோடா, “பிரதமர் நரேந்​திர மோடி தனிப்​பட்ட முறை​யில் அன்பானவர், கருணைமிக்​கவர், அக்​கறை​யுள்ள மனிதர்” என்று சமீபத்தில் பாராட்​டிப் பேசி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், அயலக இந்​திய காங்​கிரஸ் துணைத் தலை​வர் ஜார்ஜ் ஆப்​ர​கா​மும், கனடாவைச் சேர்ந்த அந்த அமைப்​பின் செயல்​பாட்​டாளர் தேவான்ஷு நரங்​கும் பிட்​ரோ​டாவுக்கு எதிராகக் குரல் எழுப்​பி​யுள்​ளனர். தேவான்ஷு நரங், காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவுக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில், ``பிட்​ரோ​டா​வின் பேச்சு வெட்​கக்​கே​டானது.

அவரை உடனடி​யாகப் பதவியி​லிருந்து நீக்க வேண்​டும்'' என்​றும் வலி​யுறுத்​தி​யுள்​ளார். பிட்​ரோ​டாவுக்கு ஜார்ஜ் ஆப்ரகாம் அனுப்பியுள்ள மின்​னஞ்​சலில், “பிரதமர் மோடிக்கு ஆதரவு அதி​கம் உள்ள வெளி​நாடு​வாழ் இந்​தி​யர்​களிடம், மதச்​சார்​பின்​மை, ஜனநாயகம், சிறு​பான்​மை​யினர் உரிமை​கள் பற்​றிப் பேசுவதே கடின​மாக உள்ள​நிலை​யில், தாங்​கள் மோடி​யின் தனிப்​பட்ட குணங்​களைப் பொது​வெளி​யில் இவ்​வளவு புகழ்ந்​தால், தனிப்பட்ட நட்​புக்​கும் அரசி​யல் ஆதர​வுக்​கும் உள்ள வேறு​பாடு பலருக்குப் புரி​யாமல் போகலாம்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை பதவி நீக்க அயலக காங். வலியுறுத்தல்
பி.எஃப். கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 25-லிருந்து 10% ஆக குறைக்க வாரியம் ஒப்புதல்

X