“அமெரிக்க அழுத்தத்தால் சமரசமா?” - கார்கே கேள்வி

“அமெரிக்க அழுத்தத்தால் சமரசமா?” - கார்கே கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு எதையும் தெரிவிக்காமல் மோடி அரசு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. 3 முக்கிய கேள்விகள் உட்பட பலவற்றுக்கு பதில் அளிக்கப்படவில்லை. அமெரிக்க அழுத்தத்தால் இந்தியா எந்த விதத்திலும் சமரசம் செய்ததா ? அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 0 சதவீத வரி என அதிபர் ட்ரம்ப் கூறுகிறார்.

இதற்கு நாம் ஒப்புக் கொண்டோமா ? நமது விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பார்களா ? அமெரிக்க வேளாண் சந்தைக்கு, நமது வேளாண் துறையை நாம் திறந்து விட்டுள்ளோமா ? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துமா ? இது தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா என்ன கூறியது ? இவற்றுக்கான பதிலை அறிய நாடாளுமன்றத்துக்கும், 140 கோடி மக்களுக்கும் உரிமை உள்ளது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

“அமெரிக்க அழுத்தத்தால் சமரசமா?” - கார்கே கேள்வி
வில்லிவாக்கத்தில் திருநங்கையை களமிறக்கும் நாதக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in