மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ரவ்னீத் சிங்

ரவ்னீத் சிங்

ரவ்னீத் சிங்

Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவியிலிருந்து ரவ்னீத் சிங் பிட்டு விலகியுள்ளார். அவரது விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் முதல் தற்போது வரையில் அவரது பதவி காலத்தில் மத்திய இணை அமைச்சராக அவர் பணியாற்றினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2024-ல் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

50 வயதான அவர், மூன்று முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். கடந்த 2024-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்தார். 2017-ல் பேரவை தேர்தலிலும், 2024-ல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி கண்டார். இந்த சூழலில் தற்போது மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

“மத்திய இணை அமைச்சராக தேசத்துக்கு பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாழ்வில் எனது பணி தொடரும்” என்று ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ரவ்னீத் சிங்</p></div>
‘இளைஞர்களுடன் நெருக்கமாக இருக்க இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுங்கள்’ - அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in