‘இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்’ - ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் கடும் அமளி

‘இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்’ - ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் கடும் அமளி
Updated on
2 min read

புதுடெல்லி: இந்​திய - சீன மோதலின்​ போது, சீனா​வின் டாங்குகள் இந்​திய எல்​லைக்​குள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி நரவனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் காந்தி கூறியதை அடுத்​து, மக்​களவை​யில் நேற்று கடும் அமளி ஏற்​பட்​டது.

குடியரசுத் தலை​வரின் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்​களவை​யில் நேற்று நடைபெற்றது. இதில் பேச எழுந்த மக்​களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தேச பக்​தி​யற்ற கட்சி என்ற பாஜக​வின் குற்​றச்​சாட்டு முதலில் பதில் அளிக்க விரும்​புவ​தாக கூறி​னார்.

டோக்​லாமில் ஒரு முகட்டை கைப்​பற்ற 4 சீன டாங்​கு​கள் நுழைந்​த​தாக முன்​னாள் ராணுவத் தளபதி எம்​.எம்​.நர​வனே தனது நூலில் கூறி​யுள்​ள​தாக ராகுல் குறிப்​பிட்​டார்.

இதற்கு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங், “இந்​தப் புத்​தகம் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்லை என்​ப​தால் அதன் அடிப்​படை​யில் ராகுல் பேச முடி​யாது” என்​றார். உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் இதே கருத்தை வலி​யுறுத்​தி​னார்.

மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, “செய்​தித்​தாள், துணுக்​கு​கள், புத்​தகங்​கள் மற்​றும் நம்​பகத்​தன்​மையற்ற இதுபோன்ற பிற விஷ​யங்​களை அவை​யில் மேற்​கோள் காட்ட முடி​யாது என விதி​களும் மரபு​களும் உள்​ளன. எனவே உங்​கள் உரை​யில் இப்​பகு​தியை நீங்​கள் தவிர்க்க வேண்​டும்" என்​றார்.

இதற்கு ‘தி கேர​வன்’ பத்​திரி​கை​யில் வெளி​யான அந்​தப் புத்​தகத்​தின் பகு​தி​கள் 100% உண்​மை​யானவை என்று ராகுல் காந்தி வாதிட்​டார். இதையடுத்து ராகுல் காந்​தியை பேச அனு​ம​திக்க வேண்​டும். அதன் பிறகு அரசு பதில் அளிக்​கட்​டும் என காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் வலி​யுறுத்​தினர்.

ஆனால், ஓம் பிர்​லா​வும், பின்​னர் நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு​வும், ஒரு புத்​தகத்​தில் இருந்து அவ்​வாறு மேற்​கோள் காட்​டு​வதற்கு எதி​ரான அவை விதி​களைக் குறிப்பிட்டனர். அது வெளி​யிடப்​பட்​டிருந்​தா​லும் கூட, அவை​யின் நடவடிக்கைகளு​டன் தொடர்​பில்​லாத எந்​தவொரு புத்​தகத்​தில் இருந்​தும் மேற்​கோள் காட்​டு​வது அனு​ம​திக்​கப்​ப​டாது என ஓம் பிர்லா கூறினார்.

அப்​படி​யென்​றால் குறைந்​த​பட்​சம் அதைப்​பற்றி விவரிக்​க​வாவது என்னை அனு​ம​திக்க வேண்​டும் என்ற ராகுல் மீண்​டும் ‘சீன டாங்கு​கள்’ பற்றி பேசத் தொடங்​கி​னார். உடனே ராஜ்​நாத் சிங் மீண்​டும் எழுந்​து, “இது சபையை தவறாக வழி நடத்​தும் ஒரு முயற்சி” என்றார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: இந்த விவ​காரம் குறித்து காங்​கிரஸ் பொதுச்செய​லா​ளர் கே.சி.வேணு கோ​பால் தனது எக்ஸ் பதி​வில், “இந்த போலி தேசி​ய​வாத அரசு தனது திறமை​யின்​மை​யின் உண்மை வெளிவரு​வதை பார்த்து மிக​வும் பயந்​து, ராகுல் காந்தி பேசுவதை தடுக்க மூத்த கேபினட் அமைச்​சர்​களை நியமித்துள்ளது. நடை​முறை விதி​களை அப்​பட்​ட​மாக தவறாகப் புரிந்​து​ கொள்​வதன் மூலம், சீனா​வுக்கு எதி​ரான மோதலில் அரசு தனது இமாலய தவறுகள் பற்றி அவை​யும் இந்​திய மக்​களும் அறிய​வி​டா​மல் செய்​கிறது” என்று கூறி​யுள்​ளார்​.

‘இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்’ - ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் கடும் அமளி
முகமூடி அணிந்து ஜவுளி அதிபர் வீட்டில் கத்திமுனையில் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் நண்பருடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in