சாதிவாரி கணக்கெடுப்புக்கான சாதி விவர சேகரிப்பு முறையில் மாற்றம் தேவை: பிரதமர் மோடிக்கு கார்கே, ராகுல் கோரிக்கை

சாதிவாரி கணக்கெடுப்புக்கான சாதி விவர சேகரிப்பு முறையில் மாற்றம் தேவை: பிரதமர் மோடிக்கு கார்கே, ராகுல் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்​பில் சாதி விவரங்​களைச் சேகரிக்​கும் முறையை மாற்​றியமைக்க வேண்​டும் என காங்கிரஸ் தலை​வர்​கள் மல்லிகார்ஜுன கார்கே மற்​றும் ராகுல் காந்தி ஆகியோர் வலி​யுறுத்தி உள்​ளனர்.

காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழு​திய கடிதத்​தில் கூறியிருப்பதாவது: சமூக நீதி கொள்​கைகளைச் செயல்​படுத்​து​வதற்கு துல்​லிய​மான சாதித் தரவு​கள் அவசி​ய​மாகிறது. ஆனால், சாதி​வாரி கணக்​கெடுப்​பின்​போது, சாதி விவரங்​களைச் சேகரிப்​ப​தற்​காக தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்ள கேள்வி​கள் தவறான வழி​காட்​டும் தன்​மை​யைக் கொண்​ட​வை​யாக உள்​ளன.

குறிப்​பாக, சாதி விவரங்​களைப் பதிவு செய்ய ‘குறிப்​பிட்ட தெரிவுகள் இல்​லாத திறந்த வினா’ முறை பயன்​படுத்​தப்படு​கிறது. இம்​முறை​யின் கீழ், மக்​கள் தங்​கள் சாதி​யின் பெயரை எப்​படி குறிப்​பிடு​கிறார்​களோ அப்​படியே பதிவு செய்​யப்​படு​கிறது. ஒரே சாதி நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் வெவ்​வேறு பெயர்​கள், துணைச் சாதிப் பெயர்​கள் அல்​லது உள்​ளூர் பெயர்​களால் அறியப்​படலாம்.

இவற்றை அப்​படியே பதிவு செய்​தால், ஒரே சாதி ஆயிரக்கணக்கான பெயர்​களாகப் பிரிக்​கப்​படலாம். இது மிக அதி​க​மான சாதிப் பிரிவு​களுக்கு வழி​வகுக்​கும். சாதி​வாரி கணக்கெடுப்பு மூலம் உரு​வாக்​கப்​படும் தரவு​களைப் பயன்படுத்து​வதை கடின​மாக்​கும். ஒரு சமூக உறுப்​பினர்​களின் சரி​யான எண்​ணிக்கை பதிவு செய்​யப்​பட​வில்லை என்​றால், அதன் நிலை​யும் தவறாகவே மதிப்​பிடப்​படும்.

தவறான தரவு​கள் பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட மற்றும் இதர விளிம்​புநிலை சமூகங்​களைப் பாதிக்​கலாம். எனவே தற்​போதுள்ள சாதி​வாரி கணக்​கெடுப்​புக்​கான வினாத்​தாளைத் திரும்​பப் பெற வேண்​டும். இதற்கு பதிலாக சாதி விவரங்​களை விரி​வாகச் சேகரிக்க வேறு முறையைத் தேர்ந்​தெடுக்க வேண்​டும். இவ்​வாறு அந்​தக் கடிதத்​தில் கூறி​யுள்​ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கான சாதி விவர சேகரிப்பு முறையில் மாற்றம் தேவை: பிரதமர் மோடிக்கு கார்கே, ராகுல் கோரிக்கை
1,700 ஏக்கர் நிலம் என்பது 90% ஆகாது: பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in