கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புத் திட்டம்: 9 மாதத்தில் 1 கோடி சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புத் திட்டம்: 9 மாதத்தில் 1 கோடி சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​தி​யாவில் பெண்​களுக்கு ஏற்​படும் புற்​றுநோய்​களில், மார்​பகப் புற்​றுநோய்க்கு அடுத்​த​படி​யாக கருப்பை வாய்ப் புற்​றுநோய் உள்​ளது. இது எச்​பிவி (Human Papilloma virus) எனப்​படும் தொற்​றால் ஏற்​படு​கிறது. இதை ஆரம்ப நிலை​யிலேயே தடுக்க, சிறுமிகளுக்கு தடுப்​பூசி போடுவது அவ​சி​யம்.

இதனை கருத்​தில் கொண்டு, கடந்த பிப்​ரவரி மாதம் நாடு தழு​விய இல​வச எச்​பிவி தடுப்​பூசி திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். இதன்​படி பெற்​றோர் சம்​மதத்​துடன் 14 வயது சிறுமிகளுக்கு அரசு சுகாதார நிலை​யங்​களில் இல​வச​மாக ஒற்றை டோஸ் எச்​பிவி தடுப்​பூசி வழங்​கப்​படு​கிறது. தடுப்​பூசி முன்​ப​திவு மற்​றும் கண்​காணிப்​புப் பணிகள் ‘யு-வின்’ டிஜிட்​டல் தளம் மூலம் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

இது தொடர்​பாக மத்திய சுகாதார அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கருப்பை வாய்ப் புற்​றுநோயைத் தடுப்​ப​தற்​கான முயற்​சிகளில் இந்​தியா ஒரு முக்​கிய மைல்​கல்லை எட்​டியுள்​ளது. இந்த நோயை ஏற்​படுத்​தக்​கூடிய எச்​பிவி தொற்​றுகளி​லிருந்து சிறுமிகளை பாது​காப்​ப​தில் இந்​தச் சாதனை ஒரு குறிப்​பிடத்​தக்க படி​யாகும்.

மேலும், இது நாடு முழு​வதும் தடுப்பு சுகாதார சேவை​களின் பரவல் அதி​கரித்து வரு​வதையும் பிரதிபலிக்​கிறது. சுமார் 1.2 கோடி சிறுமிகளை இலக்​காகக் கொண்ட இந்த இயக்​கம், 9 மாதங்​களி​லேயே ஒரு கோடி சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்தியுள்ளது.

மாநில அளவி​லான செயல்​பாடுகளில் குஜராத், உத்​தர பிரதேசம், ஆந்​திரா, மிசோரம், மத்​திய பிரதேசம் மற்​றும் பிஹார் ஆகிய 6 மாநிலங்​கள் 100 சதவீத இலக்கை எட்​டியுள்​ளன. அசாம் (95.63%), தெலங்​கானா (95.28%), கர்​நாடகா (93.16%) மற்​றும் உத்​த​ராகண்ட் (90.17%) ஆகிய மாநிலங்​களும் முன்​னிலை​யில் உள்​ளன. தடுப்​பூசி செலுத்​தப்​பட்​ட​வர்​களின் மொத்த எண்​ணிக்​கை​யில் உத்​தரப் பிரதேசம் (29.33 லட்​சம்) முதலிடத்​திலும், பிஹார் (13.70 லட்​சம்) மற்​றும் குஜராத் (7.75 லட்​சம்) ஆகிய மாநிலங்​கள் அடுத்​தடுத்த இடங்​களி​லும் உள்​ளன” என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புத் திட்டம்: 9 மாதத்தில் 1 கோடி சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி
பிஹாரில் ரூ.34,470 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

X