ஆண்களுக்கு மேலான நிலையில் பெண்களை வைத்திருக்கிறது இந்து மதம்: சபரிமலை வழக்கில் மத்திய அரசு வாதம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மறு ஆய்வு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளன. இந்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் பி.வி நாகரத்​தினா உள்​ளிட்​டோர் அடங்​கிய 9 நீதிப​தி​கள் விசா​ரித்து வரு​கின்றனர்.

இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறிய​தாவது: இந்து மதம் பெண்​களைச் சமத்​து​வ​மாக மட்​டும் நடத்​த​வில்​லை. ஆண்​களுக்கு மேலான நிலை​யில் வைத்​துள்​ளது. மத வழக்​கத்​தின் நடை​முறை​யாக நாடு முழு​வதும் ஆண்​களுக்​கும் பல்​வேறு கோயில்​களில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. புஷ்கரில் 14-ம் நூற்​றாண்டில் கட்​டப்​பட்ட பிரம்மா கோயி​லில் திரு​மண​மான ஆண்​களுக்​குத் தடை உள்​ளது.

ஆற்​றுக்​கால் பகவதி அம்​மன் கோயி​லில் பெண்​கள் கூடுவது கின்​னஸ் புத்​தகத்​தில் இடம்​பெற்​றுள்​ளது. முக்​கி​யத் திரு​நாளில் ஆண்​களுக்​குத் தடை உள்​ளது. கேரள மாநிலம் ஆலப்​புழா​வில் உள்ள சக்​குளத்​துக்காவு பகவதி அம்​மன் கோயில் ஆண் அர்ச்​சகர்​கள், 10 நாட்​கள் விரதமிருக்​கும் பெண் பக்​தர்​களின் பாதங்​களைக் கழு​வும் வழக்​கம் உள்​ளது. நாரி பூஜை நாளில் பெண்​கள் மட்​டும் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். கன்​னி​யாகுமரி பகவதி அம்​மன் கோயி​லில் மணமான ஆண்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

பிஹார் மாநிலம் முசாஃபர்​பூரிலுள்ள மாதா கோயி​ல், கேரளா​வின் கொட்​டங்​குளங்​கரா கோயி​ல் உட்பட பல கோயில்களில் இன்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. அசாம் மாநிலம் காமாக்யா கோயி​லில் அம்​பு​பாச்சி விழா​வின்​போது, பெண் அர்ச்​சகர்​கள் மட்​டும் பூஜை செய்​கின்​றனர். ஆணா​திக்க, பாலின வேறு​பாடு​கள் போன்ற அம்​சங்​கள் நமது நாட்​டில் இல்​லை. இவ்​வாறு துஷார்​ மேத்​தா தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்</p></div>
சூர்யா முதல் சிம்பு வரை - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திரையுலக பிரபலங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in