ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் அதிரடி மாற்றம் - செல்போன் எண், ரத்த வகை இனி கட்டாயம்

இந்தியர், வெளிநாட்டவருக்கு தனித்தனி வண்ணக் குறியீடு
ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் அதிரடி மாற்றம் - செல்போன் எண், ரத்த வகை இனி கட்டாயம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஓட்​டுநர் உரிமம் வழங்​கும் நடைமுறை​யில் அதிரடி மாற்​றங்​களை கொண்​டு வர மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ஓட்டுநர் உரிமம் வழங்​கும் நடைமுறை​யில் பெரும் மாற்றங்களைப் பரிந்​துரைத்து, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சகம் ஒரு வரைவு அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:- ஓட்​டுநர் உரிமங்​களில் உரிமையாளரின் ரத்தவகை, செல்​போன் எண், அவசரத் தொடர்பு விவரங்​கள் இடம்​பெறு​வது கட்டாயம். விண்​ணப்​ப​தா​ரர்​கள் இணை​ய​வழி ஆதார் சரிபார்ப்பு மூலம் முகவரி, பெயர் மற்​றும் தொடர்பு எண் மாற்​றங்​கள் உள்​ளிட்ட குறிப்​பிட்ட ஓட்​டுநர் உரிமச் சேவை​களைப் பயன்​படுத்​திக் கொண்​டால், அதற்​கான கட்டணங்கள் தள்​ளு​படி செய்​யப்​படும். இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினருக்கு தனித்​தனி வண்​ணக் குறியீட்டு ஓட்​டுநர் உரிமங்​களை வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

புதிய நடைமுறை​யின் கீழ் முகவரி, வயது மற்​றும் அடை​யாளச் சான்​றுகளுக்​காக தனித்​தனி ஆவணத் தொகுப்​பு​கள் கட்​டாயமாக்​கப்​படும். வயதுச் சான்​றுகளில் பாஸ்​போர்ட், பள்ளி மதிப்​பெண் சான்​றிதழ், பிறப்​புச் சான்​றிதழ் மற்​றும் அரசுத் துறைகளால் வழங்​கப்​படும் அடை​யாள அட்​டைகள் ஆகியவை அடங்​கும். ஆதார், பாஸ்​போர்ட், இ-ரேஷன் அட்டை மற்​றும் பான் கார்டு ஆகியவை ஏற்​றுக்​கொள்​ளக்​கூடிய அடை​யாளச் சான்​றுகளாகும்.

இந்த முன்​மொழி​வின்​படி, பாது​காப்​பான ஓட்​டுநர் பயிற்சி குறைந்தது 30 நிமிடங்​கள் நீடிக்க வேண்​டும். அதே சமயம், இணைய​வழி பாது​காப்​பான ஓட்​டுநர் பயிற்சி மதிப்​பீட்​டுக்​கான தேர்ச்சி மதிப்​பெண் தற்​போதுள்ள 60%-லிருந்து 75%-ஆக உயர்த்தப்​படும். உரிமம் வழங்​கும் அதி​காரி​கள், பெயர் மற்​றும் முகவரி உள்​ளிட்ட ஓட்​டுநர் உரிம விவரங்​களை மாற்​று​வதற்​கான இணை​ய​வழி விண்​ணப்​பங்​களை, நிராகரிப்​ப​தற்​கான காரணங்களைக் குறிப்​பிட்டு, 15 நாட்​களுக்​குள் அங்​கீகரிக்​கவோ அல்​லது நிராகரிக்​கவோ வேண்​டும். இவ்​வாறு அந்த அறி​விப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் அதிரடி மாற்றம் - செல்போன் எண், ரத்த வகை இனி கட்டாயம்
“சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசுக்கு கூடுதல் கவனம் தேவை” - திருமாவளவன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in