“சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசுக்கு கூடுதல் கவனம் தேவை” - திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on: 
1 min read

அரியலூர்: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கை பாது​காக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்​டும் என விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். அரியலூர் மாவட்​டம் கோவிந்​த​புரம் ஊராட்​சி​யில் அரங்க மேடை, பார்​பனச்​சேரி ஊராட்​சி​யில் பகுதி நேர ரேஷன் கடை, மேலப்​பழு​வூர் ஊராட்​சி​யில் சமுதாயக்​கூடம் ஆகிய​வற்றை விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வரும், எம்.பி.யுமான திரு​மாவளவன் நேற்று திறந்து வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எஸ்ஐஆர் மூலம் மிகப்​பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்​துள்​ளது. இந்​தச் சூழலில் தேர்​தல் ஆணை​யம் அடுத்​தகட்​டத்தை நோக்கி நகர்​வது ஏற்​புடையதல்ல. பாஜக, ஆர்​எஸ்எஸ் சதி முயற்​சிகளை முறியடிக்க தேசிய அளவில் ஜனநாயக சக்​தி​கள் ஓரணி​யில் திரள வேண்​டும்.

நடிகர் தனுஷ் மட்​டுமல்ல, ஜனநாயக கட்​டமைப்​பில் அனைவருக்​கும் அரசி​யலில் ஈடு​படும் உரிமையும், சுதந்​திர​மும் உள்​ளது. தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கை பாது​காக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்​டும். செஞ்​சி​யில் காணா​மல் போன சிறுமியை சிபி​சிஐடி போலீ​ஸார் கண்​டு​பி​டித்​து​விடுவார்​கள் என நம்​பு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன் </p></div>
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in