டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

Published on

ஹைதராபாத்: டெல்லி மது​பான ஊழல் வழக்​கில் தெலங்​கானா முன்​னாள் மேலவை உறுப்​பின​ரான கவி​தாவுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்​மன் வழங்​கினர்.

டெல்லி மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக தெலங்​கானா மாநில முன்​னாள் முதல்​வர் கே.சந்​திரசேகர ராவின் மகளும், நிஜா​மா​பாத் முன்​னாள் மேலவை உறுப்​பினரு​மான கவி​தாவை சிபிஐ அதி​காரி​கள் கைது செய்து டெல்லி திஹார் சிறை​யில் அடைத்​தனர். அங்கு சிபிஐ நீதி​மன்​றத்​தில் அவர் நேரில் விசா​ரணைக்கு ஆஜரா​னார்.

சுமார் ரூ.100 கோடி வரை நடந்த ஊழலில் கவி​தாவுக்​கும் தொடர்பு இருப்​ப​தாக முதலில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதன் பின்​னர், இதில் கவி​தாவுக்கு எந்​த​வித தொடர்​பும் இல்லை எனக் கூறி, சிபிஐ நீதி​மன்​றம் அவரை விடுவித்​தது. இதைத் தொடர்ந்து தனது தந்​தை​யின் பிஆர்​எஸ் கட்சி​யில் இருந்து வெளி​யேறி, விரை​வில் புதிய கட்​சியை தொடங்க உள்​ளார் கவி​தா.

இதையடுத்து வழக்​கில் நிரப​ராதி என அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, தனது குடும்​பத்​தா​ருடன் சமீபத்​தில் திருப்​பதி ஏழுமலை​யானை மலை​யேறி சென்று தரிசனம் செய்து நேர்த்​திக்​கடனை​யும் நிறைவு செய்​தார்.

இந்​நிலை​யில், நேற்று ஹைத​ரா​பாத்​தில் அவரது வீட்​டுக்​குச் சென்ற சிபிஐ அதி​காரி​கள், ஹைத​ரா​பாத் உயர்​ நீதிமன்​றத்​தில் மேல்முறை​யீடு செய்​வ​தாக கூறி, அதற்​கான சம்​மனை கவிதாவிடம் வழங்​கினர். இது தொடர்​பாக தனது வழக்​கறிஞர்​களை சந்தித்து பேசி, சட்​டப்​படி இதனை எதிர்​கொள்​வேன் என்​று கவி​தா தெரி​வித்​துள்​ளார்​.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in