

கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் (டிஎம்சிபி) நிறுவன தின பேரணிக்கு நிபந்தனையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், திரிணமூல் கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் நிபந்தனைகளை மீறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கொல்கத்தா காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.