உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி: எஸ்​சிஓ உச்சி மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்திக்கிறார்

உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி: எஸ்​சிஓ உச்சி மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்திக்கிறார்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி அரசு முறை பயண​மாக நேற்று உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்​டுக்கு சென்​றார்.

சோவி​யத் யூனியனில் இருந்து பிரிந்த உஸ்​பெகிஸ்​தான் கடந்த 1991-ம் ஆண்டு தனி நாடாக உதய​மானது. அந்த நாட்​டில் இயற்கை எரி​வா​யு, யுரேனி​யம், தங்​கம் உள்​ளிட்ட இயற்கை வளங்​கள் நிறைந்​துள்​ளன.

இந்​தி​யா​வில் இருந்து உஸ்​பெகிஸ்​தானுக்கு மருந்​துகள் மற்​றும் தொழில் துறைக்கு தேவை​யான இயந்​திரங்​கள் அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. அந்த நாட்​டில் இருந்து உரங்​கள், பழங்​கள் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கல்​வி, தகவல் தொழில்​துட்ப துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படு​கின்​றன.

கடந்த 2015, 2016-ம் ஆண்​டு​களில் உஸ்​பெகிஸ்​தானுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அரசு முறை பயணம் மேற்​கொண்​டார். கடந்த 2022-ம் ஆண்​டில் உஸ்​பெகிஸ்​தானில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு உச்சி மாநாட்​டில் அவர் பங்​கேற்​றார். சுமார் 4 ஆண்​டு​களுக்​குப் பிறகு உஸ்​பெகிஸ்​தானுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சென்​றார். தலைநகர் தாஷ்கண்ட் விமான நிலை​யம் சென்ற அவரை அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயேவ் நேரில் சென்று வரவேற்றார்.

இரு தலைவர்களும் இன்று சந்​தித்​துப் பேசுகின்றனர். அப்​போது வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்​தி, கல்வி ஆகிய துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

வரும் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​குக்கு பிரதமர் நரேந்​திர மோடி செல்​கிறார். அங்கு ஆகஸ்ட் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இந்த மாநாட்​டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​கிறார்கள். அவர்​களை பிரதமர் நரேந்​திர மோடி தனித்​தனி​யாக சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான் பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

உஸ்​பெகிஸ்​தான் அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயேவ் அழைப்​பின்​பேரில் தாஷ்கண்ட் செல்​கிறேன். இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​களும் வளர்ச்சி அடைந்த நாடு​களாக உரு​வெடுக்க உறு​தி​யேற்று உள்​ளன. இதற்​காக இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​றும். எனது உஸ்​பெகிஸ்​தான் பயணத்​தின்​போது சாஸ்​திரி நினை​வகம், மகாத்மா காந்தி மையத்​துக்கு செல்​கிறேன்.

கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ் அழைப்​பின்​பேரில் 26-வது எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கிறேன். பிராந்​திய வளர்ச்​சி, பாது​காப்​பு, போக்​கு​வரத்து இணைப்​பு, தொழில் வாய்ப்​பு​கள் குறித்து எஸ்​சிஓ தலை​வர்​களு​டன் கலந்​தாலோ​சிக்க உள்​ளேன். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி: எஸ்​சிஓ உச்சி மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்திக்கிறார்
கார்கே பங்கேற்ற கூட்டத்துக்குப் பின் ‘சுத்திகரிப்பு’: பாஜக மீது வழக்கு பதிவு செய்ய ராகுல் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in