குளிர் காலத்தில் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு இடம் மாறும் தலைநகரம்

150 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம்
குளிர் காலத்தில் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு இடம் மாறும் தலைநகரம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஜம்மு-​காஷ்மீர் முதல்வர் உமர் அப்​துல்லா தலைமையில் நேற்று ஒரு முக்​கியக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், ‘தர்​பார் மூவ் (இடம் மாறும் அரசு நிர்​வாகம்)’ எனப்​படும் நிர்​வாக இடமாற்​றத்​துக்​கான ஏற்​பாடு​களை அவர் ஆய்வு செய்​தார்.

இதன்படி தலைநகர​ம் ஸ்ரீநகரில் இருந்து, ஜம்​முவுக்கு இடம் மாறுகிறது. குளிர்​காலத்தை முன்​னிட்டு இந்த மாற்​றம் செய்​யப்​படு​கிறது. குளிர் காலம் முடிந்த பின் தலைநகரம் மீண்​டும் ஜம்​மு​விலிருந்து ஸ்ரீநகருக்கு இடம் மாற்​றப்​படு​ம்.

முதல்​வர் உமர் நடத்​திய இக்​கூட்​டத்​தில், ஜம்​முவுக்கு அலுவலகங்களை மாற்​றும்​போது சுமுக​மான, பாது​காப்​பான மற்றும் ஒருங்​கிணைந்த செயல்​பாட்டை உறுதி செய்​யு​மாறும், அதே​நேரம் ஊழியர்​களுக்​கான வசதி​களை செய்து தரு​மாறும் உத்​தர​விட்​டார். ஜம்​மு-​காஷ்மீரில் இந்த மரபு சுமார் 150 ஆண்டுகளுக்​கும் மேல் பழமை​யானது.

கடந்த 1872-ல் டோக்ரா ஆட்​சி​யாள​ரான மகா​ராஜா குலாப் சிங் ஆட்சி செய்​தார். அப்​போது அவர் இந்த இடமாற்ற மரபை முதன்​முதலாக தொடங்​கி​னார். இதற்கு பள்​ளத்​தாக்கு பகு​தி​யான ஸ்ரீநகரில் குளிர்​காலத்​தில் கடும் குளிர் நில​வுவது முக்​கியக் காரண​மானது. எனவே, குளிர்​காலத்​தில் நிர்​வாகம் ஸ்ரீநகரிலிருந்து ஜம்​முவுக்​கும், கோடைக்​காலத்​தில் ஜம்​மு​விலிருந்து ஸ்ரீநகருக்​கும் மாற்​றும் மரபு இன்​று​வரை தொடர்​கிறது.

இந்த மாற்​றத்​தின் கீழ், ஒவ்​வொரு ஆண்​டும் அரசு அலுவலகங்கள், கோப்​பு​கள், கணினிகள், மேஜைகள் மற்​றும் நாற்காலிகள் ஸ்ரீநகரிலிருந்து ஜம்​முவுக்கு மாற்​றப்​படு​கின்​றன.

அனைத்து உபகரணங்​களும் கனரக வாக​னங்​களில் ஏற்றப்​பட்டு சுமார் 300 கிலோமீட்​டர் தூரத்​தில் உள்ள ஜம்​முவுக்கு எடுத்​துச் செல்லப்படுகின்​றன. இதில், சுமார் 10,000 ஊழியர்​கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்​துக்​குப் பயணம் செய்கிறார்கள்.

ஒவ்​வொரு ஆண்​டும் நவம்​பர் முதல் வாரத்​தில் தொடங்​கும் இந்த இடமாற்​றம், மீண்​டும் மே மாதத்​தின் முதல் வாரத்​தில் முடிவடைந்து ஸ்ரீநகருக்​குத் திரும்​பு​கிறது. கடந்த ஆகஸ்ட் 2019-ல், அப்போதைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநரால் ரத்து செய்யப்பட்ட இந்த நடைமுறை மீண்டும் கொண்​டு​வரப்​படும் என உமர் அப்துல்லா உறு​தி​யளித்​திருந்​தார். அதன்​படி, தேர்​தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் அந்​த நடை​முறையை மீண்​டும்​ அமல்​படுத்​தி உள்​ளார்​.

குளிர் காலத்தில் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு இடம் மாறும் தலைநகரம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு ‘டெட்’ தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in