வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையால் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று சேர்ந்த அண்ணன்-தம்பி

இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் சகோதரர்கள் கிருஷ்ணா, சீதாராம்.

இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் சகோதரர்கள் கிருஷ்ணா, சீதாராம்.

Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் சீதா​ராம். இவர் 35 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஹரி​யா​னா​விலுள்ள தனது சொந்த ஊரிலிருந்து வெளி​யேறி பிழைப்​புக்​காக பஞ்​சாபுக்​குச் சென்​று​விட்​டார்.

மாற்​றுத் திற​னாளி​யான அவருக்கு பஞ்​சாப் மாநில அரசில் டி பிரி​வில் வேலை கிடைத்து அங்​கேயே வசித்து வந்​தார். இந்​நிலை​யில், எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்​காக ஹரி​யா​னா​வின் ஜிந்த் மாவட்​டம் மனோகர்​பூர் கிராமத்​தில் தான் படித்த அரசுப் பள்​ளி​யில் சான்​றிதழ் பெறு​வதற்​காக அண்​மை​யில் சீதா​ராம் சொந்த ஊருக்கு சென்​றுள்​ளார்.

அவருடைய பள்​ளிச் சான்​றிதழை அதி​காரி​கள் தேடிய​போது, அவரது குடும்​பம் தொடர்​பான தகவல் தெரிய​வந்​தது. அங்​குள்ள பள்ளி ஊழியர்​கள், சீதா​ராமின் அண்​ணன் கிருஷ்ணாவை தொலைபேசி​யில் அழைத்​துள்​ளனர். அப்​போது​தான் சீதா​ராம் உயிருடன் இருக்​கும் விவரமே அவருக்கு தெரிய​வந்​தது.

இதையடுத்து கிருஷ்ணா, உடனடி​யாக அங்​குள்ள வாக்​குச்​சாவடி நிலை அதி​காரியை (பிஎல்ஓ) தொடர்​பு​கொண்​டார். இதன்​மூலம் சீதா​ராம் தனது தம்​பி​தான் என்​பதை உறுதி செய்​து​கொண்​டார் கிருஷ்ணா.

இதைத்​தொடர்ந்து பள்​ளிக்கு விரைந்து வந்த கிருஷ்ணா, தனது தம்பி சீதா​ராமை கட்​டியணைத்து வரவேற்​றார். கிருஷ்ணா​வின் மனை​வி, குழந்​தைகள் உள்​ளிட்​டோரும் ஓடிவந்து ஆனந்​தக் கண்​ணீருடன் சீதா​ராமை வரவேற்​றனர்.

பின்​னர் சகோ​தரர்​கள் இரு​வரும் ஒரே வாகனத்தில் பள்​ளியி​லிருந்து புறப்​பட்​டுச் சென்​றனர். 35 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் சீதா​ராம் தனது குடும்​பத்​தா​ருடன் சேர்ந்த தகவல் இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது.

இதுகுறித்து கூடு​தல் உதவி தேர்​தல் பதிவு அதி​காரி (ஏஇஆர்ஓ) டாக்​டர் ரமேஷ் குமார் கூறும்​போது, “தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் நடத்​திய சிறப்பு வாக்​காளர் திருத்த (எஸ்​ஐஆர்) நடவடிக்​கை​யால் 35 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் அண்​ணன், தம்பி ஆகியோர் இணைந்​துள்​ளனர். வாழ்க்​கை​யில் பிரிந்​திருந்த குடும்​பம் தற்​போது எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யால் இணைந்​தது மகிழ்ச்​சி அளிக்​கிறது” என்​றார்​.

<div class="paragraphs"><p>இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் சகோதரர்கள் கிருஷ்ணா, சீதாராம்.</p></div>
உத்தர பிரதேசத்​தின் அலிகரில் இந்து கடவுள் சிலைகளை வடிக்கும் முஸ்லிம்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in