‘விந்தணுப்பையை விற்றால் ரூ.1.2 கோடி’ என ரீல்ஸை நம்பி சிறுவன் அடித்துக் கொலை

‘விந்தணுப்பையை விற்றால் ரூ.1.2 கோடி’ என ரீல்ஸை நம்பி சிறுவன் அடித்துக் கொலை
Updated on
1 min read

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் சமூக வலைதளமான இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸில் உடல் உறுப்புகளான விந்தணுப்பை உள்​ளிட்​ட​வற்றை விற்​றால் கோடிக்​கணக்​கில் பணம் கிடைக்​கும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த வீடியோவை பார்த்த ஒரு கும்​பல் இதை நம்பி, 17 வயது சிறு​வனை கொடூர​மாக கொலை செய்​துள்​ளது.

மசூ​தி, தர்கா போன்ற இடங்​களில் பேனா மற்​றும் சாவி கொத்துகளை விற்று குடும்​பத்தை காப்​பாற்றி வந்த ரேஹன், கொலை செய்​யப்​பட்ட சிறு​வன் ஆவார். பிபிஏ மாணவ​ரான ஜோஹெப் கான் என்​பவர் தான் ஒரு மருத்​து​வர் என பொய் சொல்லி, கோடிக்​கணக்​கில் பணம் கிடைக்​கும் என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நண்​பர்​களை நம்ப வைத்​துள்​ளார்.

இதனை உண்மை என நம்​பிய ஒரு கும்​பல், கடந்த 6-ம் தேதி ரூ.100 தரு​வ​தாக ஆசை காட்டி ரேஹனை தனி​யாக ஒரு இடத்​துக்கு அழைத்​துச் சென்று தலை​யில் பின்​புற​மாகத் தாக்​கி, பின்​னர் கத்தி​யால் குத்தி கொலை செய்​துள்​ளது.

அதன்​பிறகு சடலத்​திலிருந்து உறுப்பை அகற்றி விநி​யோகிக்க முயன்​ற​போது​தான், உறுப்​பு​களை விற்​றால் கோடிக்​கணக்​கில் பணம் கிடைக்​கும் என்​ப​தற்​கான ஆதா​ரமோ அல்​லது அதை வாங்கு​வதற்​கான வாடிக்​கை​யாளரோ இல்லை என்ற உண்மை அவர்​களுக்கு தெரிய​வந்​துள்​ளது.

இந்​நிலை​யில் ரேஹனின் தாய் கொடுத்த புகாரையடுத்து விசாரணை நடத்தி கொலை​யானது சிறு​வன் ரேஹன் என்​பதை உறு​தி​செய்​தனர். மேலும், இந்த வழக்​கில் போலி மருத்​து​வர் ஜோஹேப் கான், ஆமீர் குரேஷி உட்பட 5 பேரை கைது செய்​து விசா​ரித்​து வரு​கின்​றனர்.

‘விந்தணுப்பையை விற்றால் ரூ.1.2 கோடி’ என ரீல்ஸை நம்பி சிறுவன் அடித்துக் கொலை
அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்? - எடுபடாத ட்ரம்ப் வியூகமும் தாக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in