மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக தலைவர் நிதின் நவீன் வெற்றி

மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக தலைவர் நிதின் நவீன் வெற்றி
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் உட்பட 5 பேர் எம்.​பி.க்​களாக தேர்வு செய்​யப்​பட்​டனர். ராஷ்டிரிய ஜனதா தள வேட்​பாளர் ஏ.டி.சிங் தோல்வி அடைந்​தார்.

நாடு முழு​வதும் 10 மாநிலங்​களை சேர்ந்த 37 மாநிலங்​களவை எம்.பி. பதவி​யிடங்​கள் ஏப்​ரலில் நிறைவடைகின்​றன. இந்த பதவி​களுக்​கான தேர்​தல் அறி​விப்பு கடந்த பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​பட்​டது. தமிழகம், தெலங்​கா​னா, மகா​ராஷ்டி​ரா, மேற்​கு​ வங்​கம், அசாம், சத்​தீஸ்​கர், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 26 பேர் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டனர்.

பிஹார் 5, ஒடிசா 4, ஹரி​யானா 2 ஆகிய மாநிலங்​களின் 11 மாநிலங்​களவை எம்.பி. பதவி​களுக்கு 14 பேர் போட்​டி​யிட்​டனர். இதைத் தொடர்ந்து 3 மாநிலங்​களி​லும் நேற்று தேர்​தல் நடை​பெற்​றது.

பிஹாரில் பாஜக வெற்றி: பிஹாரின் 5 மாநிலங்​களவை எம்.பி. பதவி​களுக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் உட்பட 5 பேர் போட்​டி​யிட்​டனர். இதில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் தலா 44 வாக்​கு​கள், ராம்​நாத் தாக்​குர், உபேந்​திர குஷ்​வாகா தலா 42 வாக்​கு​களை பெற்று வெற்றி பெற்​றனர்.

ஐந்​தாவது எம்.பி. பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த ஷிவேஷ் ராம், ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த ஏ.டி சிங் இடையே கடும் போட்டி நிலவியது. நிறைவாக, ஷிவேஷ் ராம் 41 வாக்​கு​களை பெற்று எம்.​பி.​யாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

ஆர்​ஜேடி வேட்​பாளர் ஏ.டி.சிங்​குக்கு 37 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன. எதிரணி​யான மகாபந்​தன் கூட்​ட​ணியை சேர்ந்த 4 எம்​எல்​ஏக்​கள் வாக்​கெடுப்​பில் பங்​கேற்​க​வில்​லை. இதனால், 5 எம்.பி. பதவி​யையும்பாஜக எளி​தாக கைப்பற்றியது.

ஒடி​சா​வில் 2 பாஜக எம்​பிக்​கள்: ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்.பி. பதவி​களுக்கு நேற்று தேர்​தல் நடை​பெற்​றது. குதிரை பேரம் அச்​சத்​தால் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள், பிஜு ஜனதா தள எம்​எல்​ஏக்​கள் தனி​யார் சொகுசு விடு​தி​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். நேற்று நடந்த தேர்​தலில் பாஜகவை சேர்ந்த மன்​மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே வெற்றி பெற்​றனர்.

பிஜு ஜனதா தளத்தின் சான்ட்​ரப்ட் மிஸ்ரா மட்​டுமே வெற்றி பெற்​றார். அக்கட்​சியின் மற்​றொருவேட்​பாளர் தத்​தேஸ்​வர் ஹோடாதோல்​வியடைந்​தார். ஹரி​யா​னா​வில் 2 காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள், ஒரு பாஜக எம்​எல்​ஏ​வின் வாக்கு தொடர்​பாக ஆட்​சேபம் எழுந்ததால் வாக்கு எண்​ணிக்கை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக தலைவர் நிதின் நவீன் வெற்றி
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உட்பட 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in