லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்

லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்​தின் பாஜக எம்​எல்ஏ மைதிலி தாக்​கூர்​(25). நாட்​டின் மிக இளம் வயது எம்​எல்ஏ இவர்​தான். இவர் பிஹார் சட்​டப்​பேர​வை​யில் நேற்று பேசி​ய​தாவது:

2005-ம் ஆண்​டுக்கு முன்பு இருந்த காலத்தை நான் நினைத்து பார்க்​கும்​போதெல்​லாம், மகா​பாரதத்​தில் அஸ்​தி​னாபுரத்தை மன்​னர் திருத​ராஷ்டிரர் ஆண்​டது​தான் ஞாபகத்​துக்கு வரு​கிறது. மன்​னருக்கு பார்​வை​யில்​லை. அதனால் அவர் எதை​யும் பார்க்க விரும்​ப​வில்​லை. அவருக்கு ஹஸ்​தி​னாபுரத்தை பற்றி கவலை​யில்​லை. அவருக்கு மகன் துரியோதனன் மட்​டுமே முக்​கி​யம்.

பிஹார் மாநிலம் 20 ஆண்​டு​களுக்கு முன்பு கல்விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​க​வில்​லை. அதனால் பல தலை​முறை​யினர் இன்​னும் கஷ்டப்​படு​கின்​றனர். அப்​போது ஆட்​சி​யில் இருந்​தவர்​கள் கண்​களை​யும், காதுகளை​யும் கட்​டிக் கொண்​டனர். பிஹாரில் மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்​றால் ஆபத்து என மக்​கள் கூறு​வார்கள்.

ஆனால் இன்று அதி​காலை 3 மணிக்கு தர்​பங்​கா​விலிருந்து புறப்​பட்டு பாட்​னா​வில் எனது வீட்​டுக்கு நான் பாது​காப்​பாக செல்​கிறேன். இந்த மாற்​றம் முதல்​வர் நிதிஷ் குமாரின் சிறந்த நிர்​வாகத்​தால் ஏற்​பட்​டுள்​ளது. முதல்​வர் நிதிஷ் குமார் கடந்த 2006-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவி​களுக்கு சைக்​கிள் வாங்க நிதி அளிக்​கும் திட்​டத்தை அறி​முகப்​படுத்​தி​னார்.

அதன்​பின்​பு​தான் எனது மது​பானி கிராமத்​தில் பெண் குழந்​தைகள் பள்​ளிக்கு செல்ல தொடங்​கினர். பிஹாரின் புதல்வி உண்​மையை எடுத்​துக் கூறி​னால், எதிர்க்கட்சியினர் கூச்​சலிடு​கிறார்​கள். இவ்​வாறு மைதிலி தாக்​கூர்​ பேசி​னார்​.

லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்
ஏஐ வளர்ச்சி மற்றும் முக்கிய தாதுக்களை பெற பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் சேர இந்தியா ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in