ஏஐ வளர்ச்சி மற்றும் முக்கிய தாதுக்களை பெற பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் சேர இந்தியா ஒப்பந்தம்

ஏஐ வளர்ச்சி மற்றும் முக்கிய தாதுக்களை பெற பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் சேர இந்தியா ஒப்பந்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: செயற்கை நுண்​ணறிவு வளர்ச்​சிக்​காக​வும் முக்​கிய தாதுக்​களை பகிர்ந்து கொள்​ள​வும் உரு​வாக்​கப்​பட்​டுள்ள அமெரிக்கா தலை​மையி​லான பாக்ஸ் சிலிக்கா கூட்​ட​ணி​யில் இணைய இந்​தியா ஒப்​பந்​தம் செய்​தது.

பாக்ஸ் சிலிக்கா என்​பது செயற்கை நுண்​ணறிவு வளர்ச்சி மற்​றும் செமிகண்​டக்​டர்​களுக்​கான உலகளா​விய விநி​யோகத்தை பாது​காப்​ப​தற்​காக அமெரிக்​கா​வால் தொடங்​கப்​பட்ட கூட்​ட​ணி​யாகும். இதில் ஆஸ்​திரேலி​யா, கிரீஸ், இஸ்​ரேல், ஜப்​பான், கத்​தார், தென் கொரி​யா, சிங்​கப்​பூர், ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் இங்​கிலாந்து ஆகியவை உறுப்பு நாடு​களாக உள்​ளன. டெல்​லி​யில் நடை​பெறும் ஏஐ உச்சி மாநாட்​டில் அமெரிக்கா தலை​மையி​லான பாக்ஸ் சிலிக்கா அமைப்​புடன் இந்​தியா நேற்று ஒப்​பந்​தம் செய்​தது.

இதன் மூலம் அரிய வகை தாதுக்​கள் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு விநி​யோகத்​துக்கு சீனாவை சார்ந்​திருப்​பது குறை​யும். அடுத்த தலை​முறை தொழில்​துறை​களுக்​குத் தேவை​யான முக்​கிய ஆதா​ரங்களைப் பாது​காப்​பான முறை​யில் பெறு​வது, தொழில்​நுட்ப ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வதற்​காக இந்த ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தியா - அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக​வுள்ள நிலை​யில், அமெரிக்கா தலை​மையி​லான பாக்ஸ் சிலிக்கா அமைப்புடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த ஒப்​பந்​தம் குறித்து மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது:

இந்​தியா இப்​போது பாக்ஸ் சிலிக்​கா​வின் ஓர் அங்​க​மாக மாறி​யுள்​ளது. இது இந்​தி​யா​வின் மின்​னணு மற்​றும் செமிகண்​டக்​டர் தொழில்​துறைக்கு மிக​வும் பயனளிக்​கும். இந்​தி​யா​வில் ஏற்​க​னவே பத்து செமிகண்​டக்​டர் ஆலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. மிக விரை​வில், முதல் செமிகண்​டக்​டர் ஆலை வணிக ரீதி​யான உற்​பத்​தி​யைத் தொடங்​க​வுள்​ளது. இந்​தி​யா​வில் ஒரு முழு​மை​யான தொழில் சூழல் உரு​வாகி வரு​கிறது. இதற்கு பாக்ஸ் சிலிக்கா முக்​கிய​மான​தாக இருக்​கும். இதன் மூலம் இந்​திய இளைஞர்​கள் பயனடைவர். இவ்​வாறு அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

இந்த ஒப்​பந்​தம் குறித்து அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் கூறுகை​யில், “21-ஆம் நூற்​றாண்​டின் பொருளா​தார மற்​றும் தொழில்​நுட்ப ஒழுங்கை வடிவ​மைப்​ப​தற்கு இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் இணைந்​துள்​ளன. இந்​தி​யா​வின் பொறி​யியல் திறன், தாதுக்​களை மேம்​படுத்​து​வ​தில் அடைந்​துள்ள முன்​னேற்​றம் மற்​றும் அமெரிக்​க-இந்​திய தொழில்​நுட்ப ஒத்​துழைப்​பை வலுப்​படுத்​து​வ​தில்​ அதன்​ பங்​கு ஆகியவை மிக அவசி​ய​மானது. உலகள​வில்​ நம்​பக​மான செயற்​கை நுண்​ணறிவை மேம்​படுத்​து​வதே இந்​த கூட்​​டாண்​மை​யின்​ நோக்​கம்​” என்​றார்​.

ஏஐ வளர்ச்சி மற்றும் முக்கிய தாதுக்களை பெற பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் சேர இந்தியா ஒப்பந்தம்
உடுப்பி கடற்படை தளம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in