சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் சட்​டப்பேர​வை​யில் கட்​டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றப்​பட்​டது. இதற்கு காங்​கிரஸ் கட்சி ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளது.

சத்​தீஸ்​கர் மாநில உள்​துறை அமைச்​சர் பொறுப்பை வகிக்​கும் துணை முதல்​வர் விஜய் சர்மா பேர​வை​யில் நேற்று சத்​தீஸ்​கர் தர்ம சுதந்​திர விதேயக்​(மத சுதந்​திர மசோ​தா, 2026) என்ற மசோ​தாவை தாக்​கல் செய்​தார். கட்​டாய மதமாற்​றம், வற்​புறுத்தி மதம் மாற்​று​தல், ஆசை காட்​டு​தல், மோசடி அல்​லது தவறான சித்​தரிப்பு ஆகிய​வற்​றின் மூலம் நடை​பெறும் மத மாற்​றங்​களைத் தடுக்​கும் நோக்​கில் இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆனால், இதற்கு பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான சரண் தாஸ் மகந்த் கடும் ஆட்​சேபம் தெரிவித்​தார். இந்த மசோதா முதலில் பேரவை தேர்​வுக் குழு​வினரின் பரிசீலனைக்கு அனுப்​பப்பட வேண்​டும் என்​று அவர் தெரிவித்தார். மேலும், இதைக் கண்​டித்து அவையி​லிருந்து காங்கிரஸ் உறுப்​பினர்​கள் வெளிநடப்​பும் செய்​தனர்.

இதுகுறித்து சரண் தாஸ் மகந்த் கூறும்​போது, “இது​போன்ற மசோ​தாக்​களை 11 மாநிலங்​கள் உரு​வாக்​கி​யுள்​ளன. இவை அனைத்தும் உச்ச நீதி​மன்​றத்​தின் பரிசீலனை​யில் உள்​ளன. எனவே, இந்த மசோ​தாவை அவசர அவசர​மாக அவை​யில் தாக்கல் செய்​யக்​கூ​டாது” என்​றார். இதனிடையே இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றம்
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in