உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்தும் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மசோதா குறித்து விவாதம் நடைபெறவில்லை.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த சட்டப்பூர்வ தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.

மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை சுருக்கமாக அறிமுகப்படுத்திய பிறகு, தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் பேசுமாறு அவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், மசோதா நேரடியாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in