திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - முழு விவரம்

அனைத்து மனுக்களையும் விசாரிக்கப் போவதாக அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண்.(கோப்புப்படம்)

திருப்பரங்குன்றம் தீபத்தூண்.(கோப்புப்படம்)

Updated on
3 min read

புதுடெல்லி: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் திருக்​கார்த்​திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்​டுமென்ற சென்னை உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யின் உத்​தர​வுக்கு தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. அத்​துடன் இதுதொடர்​பான அனைத்து மனுக்​களை​யும் விசா​ரிக்​கப் போவ​தாக உச்ச நீதி​மன்​றம் அறி​வித்​துள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் திருக்​கார்த்​திகை நாளான கடந்​தாண்டு டிசம்​பர் 3-ம் தேதி தீபம் ஏற்​றக் கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்​கு​மார் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்​திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டும் என்று கடந்த 2025 டிசம்​பர் 1-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவு நிறை​வேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர் ஆகி​யோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகி​யோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதி​மன்ற தீர்ப்பை நிறை​வேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இதனை தொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் டிவிஷன் பெஞ்ச்​சில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் டிவிஷன் பெஞ்ச், அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை விதித்து உத்​தர​விட்​டது. அதேவேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

ஆனால், தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து டிவிஷன் பெஞ்ச் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

அதே​போல, திருப்​பரங்​குன்​றம் தீபம் விவ​காரத்​தில் பிர​தான மனு​தா​ரர் ராம ரவிக்​கு​மார் சார்​பில், மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற எத்​தனை பேரை அனு​ம​திக்​கலாம் என்​பது குறித்து தொல்​லியல் துறை​யுடன் ஆலோ​சித்து முடி​வெடுக்க வேண்​டும் என்​பது உட்பட சில சரத்​துகளை உத்​தர​வில் இருந்து நீக்க கோரி மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறை​யீட்டு மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அரவிந்த் குமார், விபுல்​.எம்​.பஞ்​சோலி ஆகி​யோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, நீதிப​தி​கள், கார்த்​திகை தீபத் திரு​நாளில் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள அந்த தீபத் தூணில் விளக்​கேற்​றும் நடை​முறை முன்பு இருந்​ததா என்று கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சேகர் நாப்​டே, ‘‘தீபத் தூணில் தீபம் ஏற்​றும் நடை​முறை இதற்கு முன்பு இல்​லை. தற்​போது சென்னை உயர் நீதி​மன்​றம் புதிய நடை​முறையை செயல்​படுத்​தும் வகை​யில் உத்​தர​விட்​டுள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.

மேலும், ‘‘ஏற்​கெனவே இதே விவ​காரம் தொடர்​பாகத் தாக்​கல் செய்​யப்​பட்ட 4 மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது ஒரு புதிய மனுவை விசா​ரித்து உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. அது​வும் தீபத் திரு​நாள் நெருங்​கும் வேளை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட ஒரு மனு​வில் இவ்​வாறான உத்​தரவை உயர்​நீ​தி​மன்​றம் பிறப்​பித்​திருக்​கிறது.

ஒரு​வேளை மனு​தா​ரருக்கு நல்ல நோக்​கம் இருந்​திருந்​தால் இத்​தனை ஆண்​டு​களாக அவர் ஏன் வழக்கு தொடுக்​க​வில்​லை?’’ என்று கேள்வி எழுப்​பி​னார். அத்​துடன் தீபத்​தூணில் தீபம் ஏற்ற பிறப்​பித்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தார்.

அப்​போது, எதிர்​மனு​தா​ரர் ராம ரவிக்​கு​மார் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், ‘‘சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த ஜனவரி மாதமே உத்​தரவு பிறப்​பித்​திருந்த நிலை​யில், தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காமல் தற்​போது தாமத​மாக மேல்​முறை​யீடு செய்​துள்​ளது’’ என்று குற்​றம் சாட்​டி​னார். மேலும், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணைக்கு வரும் போதெல்​லாம், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருப்​ப​தாகக் கூறி வழக்கை தாமதப்​படுத்தி வரு​வ​தாக​வும் தெரி​வித்​தார்.

அதை கேட்ட நீதிப​தி​கள், ‘‘ஜன​வரி மாதமே உயர் நீதி​மன்ற உத்​தரவு பிறப்​பித்த நிலை​யில், இத்​தனை நாட்​களாக தமிழக அரசு என்ன செய்து கொண்​டிருந்​தது?’’ என்று கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அறநிலை​யத் துறை தரப்​பில் பதிலளித்த வழக்​கறிஞர், ‘‘இந்த வழக்கு தொடர்​புடைய பல்​வேறு ஆவணங்​களை மொழிபெயர்க்க வேண்​டி​யிருந்​த​தால் கால தாமதம் ஏற்​பட்​டது. தற்​போது அனைத்து ஆவணங்​களும் நீதி​மன்​றத்​தின் பார்​வைக்கு சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

அனைத்​துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், ‘‘தற்​போதைய நிலை​யில் திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில், சென்னை உயர் நீதி​மன்​றம் வழங்​கிய உத்​தர​வுக்கு எந்​த​வித இடைக்​கால தடை​யும் விதிக்க முடி​யாது. அனைத்து மனுக்களையும் முழு​மை​யாக விசா​ரித்த பிறகே உரிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்’’ என்று உத்​தர​விட்​டனர்.

இந்த வழக்​கில் ராம ரவிக்​கு​மார், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மதுரை மாநகர காவல் ஆணை​யர், திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் செயல் அதி​காரி உள்​ளிட்ட அனைத்து எதிர் மனு​தா​ரர்​களும் பதிலளிக்க நோட்​டீஸ் அனுப்ப நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற எத்​தனை பேரை அனு​ம​திக்​கலாம் என்​பது குறித்து தொல்​லியல் துறை​யுடன் ஆலோ​சித்து முடி​வெடுக்க வேண்​டும் உள்​ளிட்ட சரத்​துகளை உத்​தர​வில் இருந்து நீக்க கோரி ராம ரவிக்​கு​மார் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவுக்​கு, திருச்சி வட்​டத்​தின் இந்​திய தொல்​லியல் துறை ஆய்​வாளர், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மதுரை மாநகர காவல் ஆணை​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், அருள்​மிகு சுப்​பிரமணி​யன் சுவாமி கோயில் செயல் அதி​காரி உள்​ளிட்​டோர் பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்த நீதிப​தி​கள், இந்த வழக்கை தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு மனுவோடு இணைத்​தும் உத்​தர​விட்​டனர். இதையடுத்​து, திருப்​பரங்​குன்​றம் தீபம் தொடர்​பான வழக்​கின் விசாரணை 8 வாரங்​களுக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் தீபத்தூண்.(கோப்புப்படம்)</p></div>
காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in