குஜராத்தில் கடைகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள் 24 மணி நேரம் திறப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத்தில் கடைகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள் 24 மணி நேரம் திறப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: குஜ​ராத்​தில் கடைகள், வணிக வளாகங்​கள் 24 மணி நேர​மும் திறந்​திருக்க வகை செய்​யும் சட்​ட​த்திருத்த மசோ​தா, அம்​மாநில சட்​டப் பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டது.

குஜ​ராத்​தின் மாநக​ராட்​சிப் பகு​தி​கள், மருத்​து​வ​மனை​கள், தேசிய நெடுஞ்​சாலைகள், ரயில் நிலை​யங்​கள், பெட்​ரோல் நிலை​யங்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் போன்ற குறிப்​பிட்ட பகு​தி​களில் கடைகள் மற்​றும் வணிக வளாகங்​கள் 24 மணி நேர​மும் திறக்​கப்​பட்டு செயல்​பட்டு வந்​தன.

மற்ற இடங்​களில் செயல்​பாட்டு நேரங்​களில் கட்​டுப்​பாடு​கள் இருந்​தன. இப்​பு​திய திருத்​தத்​தின் மூலம் அத்​தகைய நேரக் கட்​டுப்​பாடு​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இதற்​காக, குஜ​ராத் மாநிலக் கடைகள் மற்​றும் நிறு​வனங்​கள் சட்​டம், 2019-ல் ஆளும் பாஜக அரசு ஒரு முக்​கிய திருத்​தத்​தைக் கொண்டு வந்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யின் மழைக்​காலக் கூட்​டத்​தொடரின் கடைசி நாளில் இது அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதற்​காக, குஜ​ராத் எளி​தாக வணி​கம் செய்​வதற்​கான மசோ​தா, 2026 நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இந்​தத் திருத்​தத்​தின்​படி, காவல் துறை அல்​லது உள்​ளூர் அதி​காரி​கள் வணிக வளாகங்​கள், கடைகள், உணவகங்​கள், வாக​னங்​கள் பழுது​பார்க்​கும் நிலை​யங்​கள் உள்​ளிட்​ட​வற்றை வெறும் நேரக் கட்​டுப்​பாட்​டின் அடிப்​படை​யில் மட்​டும் இனி மூட உத்​தர​விட முடி​யாது.

இதுகுறித்​து, மாநிலத் தொழில் துறை அமைச்​சர் டாக்​டர் ஜெய​ராம் காமித் சட்​டப்​பேர​வை​யில் பேசும்​போது, “மாநிலத்​தில் வணி​கம் தொடர்​பான ஒழுங்​கு​முறை நடை​முறை​களை எளிமை​யாக்​க​வும், விரைவுபடுத்​த​வும், வெளிப்​படை​யான​தாக​வும் மற்​றும் வணி​கத்​துக்கு உகந்​த​தாக​வும் மாற்ற உள்​ளோம்.

இதன்​படி, கடைகள், வணிக வளாகங்​கள், உணவகங்​கள், தங்​கும் விடு​தி​கள், சிற்​றுண்டி நிலை​யங்​கள், வாக​னம் பழுது​பார்க்​கும் நிலை​யங்​கள் மற்​றும் விற்​பனையகங்​கள் இனி 24 மணி நேர​மும் செயல்​படலாம்.

இருப்​பினும்,ஊழியர்​களின் வேலை நேரம், விடுப்பு மற்​றும் பாது​காப்பு உள்​ளிட்ட உரிமை​கள் தொடர்​பான வி​தி​முறை​கள் தொடர்ந்து அமலில் இருக்​கும்​’’ என்​றார்​.

குஜராத்தில் கடைகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள் 24 மணி நேரம் திறப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in