இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு

பெ.சண்முகம் | மு.வீரபாண்டியன்

பெ.சண்முகம் | மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: இடைத்​தேர்​தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இன்று அறிவிக்க உள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. திமுக, அதி​முக, தவெக ஆகிய பிர​தானக் கட்​சிகள் தங்​களது வேட்​பாளர்​களை அறி​வித்துள்​ளன. கூட்​ட​ணிக் கட்​சிகளும் தங்​களது ஆதரவை வெளிப்​படுத்தி வரும் நிலை​யில், இடது​சாரி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் நிலைப்​பாடு என்ன என்​பது பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தவெக தரப்​பில் கூட்​ட​ணிக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​ட​போதும் அதில் இணை​யாமல், வெளியி​லிருந்து மட்​டுமே ஆதரவு என தெரி​வித்​ததோடு, மக்​களின் பிரச்​சினை​களை மையப்​படுத்தி அரசுக்கு எதி​ராக தொடர்ச்​சி​யாக குரல் எழுப்பி வரும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், இந்த இடைத்​தேர்​தலில் தவெக​வுக்கு ஆதரவு அளிக்​கு​மா? என்ற கேள்வி அரசி​யல் வட்​டாரங்​களில் பேசுபொருளாக மாறி​யுள்​ளது. இதையொட்டி இரு கட்​சிகளும் தொடர்ந்து விவா​தித்​தும் வரு​கின்​றன.

இதற்​கிடையே, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நிர்​வாகக் குழுக் கூட்​டம் தி.நகரில் உள்ள பாலன் இல்​லத்​தில், மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது. இதில் மாநிலச் செய​லா​ளர், உறுப்​பினர்​களு​டன் பங்​கேற்று இடைத்​தேர்​தல் குறித்து கலந்​துரை​யாடி​னார். இன்​றும் இந்த ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெறவுள்​ளது. அதன் முடி​வில் கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ நிலைப்​பாடு குறித்து அறிவிக்​கப்பட உள்​ளது.

அதே​போல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தலை​மை​யில் நேற்று காணொலி வாயி​லாக செயற்​குழுக் கூட்​டம், தி.நகரில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “இடைத்​தேர்​தல் தொடர்​பாக திருச்​சி​யில் இன்று அவசர மாநிலக் குழு கூட்​டத்தை கூட்​டு​கிறோம். அதில் இறுதி முடிவு எடுக்​கப்​பட்டு அறிவிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம் | மு.வீரபாண்டியன்</p></div>
ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in