சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போபால் பத்திரிகை அதிபருக்கு 10 ஆயுள் தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போபால் பத்திரிகை அதிபருக்கு 10 ஆயுள் தண்டனை
Updated on: 
1 min read

போபால்: ஐந்து சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில், போபாலைச் சேர்ந்த செய்​தித்​தாள் உரிமையாளர் பியாரே மியானுக்கு 10 தொடர் ஆயுள் தண்​டனைகளும், ரூ.77.64 லட்​சம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பளித்​தது.

சிறப்பு நீதிபதி குமுதினி சிங் வழங்​கிய இந்​தத் தீர்ப்​பில், பியாரே மியானுக்கு (78) விதிக்​கப்​பட்ட 10 ஆயுள் தண்​டனைகளில் 8 தண்டனைகள் ‘சாகும் வரை சிறை’ தண்​டனையாகும். இவருக்கு உடந்​தையாக இருந்த ரபியா பி என்​பவருக்கு 20 ஆண்​டுகள் சிறைத்​தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வீட்டு வேலை மற்​றும் ரூ.10,000 மாதச் சம்​பளம் தரு​வ​தாகக் கூறி, ஏழைச் சிறுமிகளைக் குறிவைத்து 2014 முதல் பியாரே மியான் இந்த அநீதியை இழைத்து வந்​துள்​ளார். இவ்​வழக்​கில் பாதிக்​கப்​பட்ட சிறுமிகளுக்​குச் சட்​ட​விரோதக் கருக்​கலைப்பு செய்ய உதவிய​தாக மருத்​து​வர் ஹேமந்த் மிட்​டல் என்​பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்​டனையும், உடந்​தையாக இருந்த ஓவைஸ் என்​பவருக்கு ஆயுள் தண்​டனையும், ஸ்​வீட்டி விஸ்வகர்மா என்பவருக்கு 20 ஆண்​டுகள் சிறை தண்​டனையும் ஏற்​கெனவே விதிக்​கப்​பட்​டுள்​ளது.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: போபால் பத்திரிகை அதிபருக்கு 10 ஆயுள் தண்டனை
புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in