கேரள கடற்படை அகாடமியில் பணிபுரிந்த வங்கதேச நபர் கைது

கேரள கடற்படை அகாடமியில் பணிபுரிந்த வங்கதேச நபர் கைது
Updated on
1 min read

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள எழிமலையில் இந்திய கடற்படை அகாடமி இயங்கி வருகிறது. உலகின் 3-வது பெரிய கடற்படை அகாடமியாக அறியப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நிறுவனமாக விளங்கும் இந்த அகாடமியில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னை ஒரு இந்தியக் குடிமகனாக அடையாளப்படுத்திக் கொண்டு ஓராண்டாக வேலை பார்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பிப்லோப் சோரன் (32) கடற்படை அகாடமியின் சலவைப் பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

சமீபத்தில் அவரது நடத்தை மீது சந்தேகம் கொண்ட கடற்படை அதிகாரிகள், அவரைக் கண்காணிப்பில் வைத்தனர். பின்னர் அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது, ​​அவர் ஒரு வங்கதேச குடிமகன் என்பதைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் பிற தகவல்கள் அவரது செல்போனில் இருந்து கிடைத்தது. இதனையடுத்து, கடற்படை அதிகாரிகள் அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

கேரள கடற்படை அகாடமியில் பணிபுரிந்த வங்கதேச நபர் கைது
தமிழ்நாடு ஜூடோ சங்க நிர்வாகிகள் தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in