அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத்ராய் குற்றமற்றவர்: ஆர்எஸ்எஸ், விஎச்பி, சாதுக்கள் கூட்டத்தில் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத்ராய் குற்றமற்றவர்: ஆர்எஸ்எஸ், விஎச்பி, சாதுக்கள் கூட்டத்தில் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை மற்றும் நன்கொடை பணம் திருட்டு புகார் தொடர்பாக எஸ்​ஐடி விசாரணை நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், ஆர்​எஸ்​எஸ், விஎச்​பி, மடா​திப​தி​கள், உள்​ளூர் சாதுக்​களின் முதல் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், காணிக்கை திருட்​டால், நாடு முழு​வதும் உள்ள லட்​சக்​கணக்​கான ராம பக்தர்களிடையே அவநம்​பிக்கை ஏற்​பட்​டுள்​ளது. அதை போக்க வேண்​டும். ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்​கட்​டளை​யின் நற்​பெயரைப் பாது​காக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது. இனி வதந்​தி​களை நம்​பாமல், எஸ்​ஐடி விசா​ரணையை நம்ப வேண்​டும் என்று பக்​தர்​களுக்கு சாதுக்​கள் வேண்​டு​கோள் விடுத்தனர்.

இதுகுறித்து முக்​கிய நிர்​வாகி ராஜ்கு​மார் தாஸ் கூறுகை​யில், “குற்றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் சிறை​யில் உள்​ளனர். விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. விசா​ரணை முடி​யும் முன்பே நாம் எந்த முடிவுக்​கும் வரக் கூடாது. அயோத்தி அல்​லது அறக்கட்டளை முன்னாள் பொதுச் செயலாளர் சம்​பத் ராயையோ அவதூறு செய்யும் பிரச்​சா​ரத்தை எந்​தச் சூழ்​நிலை​யிலும் ஏற்க முடி​யாது” என்​றார்.

விஎச்பி சர்​வ​தேசப் பொதுச் செய​லா​ளர் பஜ்ரங் லால் பாக்டா கூறும்​போது, “காணிக்கை திருட்​டில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. குற்​றமற்​றவர்​கள் தங்​கள் சமூக சேவையைத் தொடர்​வார்​கள். சம்​பத் ராய் குற்​றமற்​றவர். அவர் பகவான் ராமரின் உண்​மை​யான பக்​தர்” என்றார்.

இந்​தக் கூட்​டத்​தில், ஆர்​எஸ்​எஸ் முன்​னாள் நிர்​வாகி​யும் ராமர் கோயில் பொறுப்​பாள​ரு​மான சுரேஷ் பய்​யாஜி ஜோஷி, பத்​தர் மந்​திர் மஹந்த் மனிஷ்​தாஸ், ராமாஸ்​ரமத்​தின் மஹந்த் ஜெய​ராம் தாஸ், மஹா மண்​டலேஷ்வர் மஹந்த் கிரீஷ்​தாஸ், நிர்​வாணி ஆனி​யின் மஹந்த் முரளி​தாஸ் உள்​ளிட்​டோர் தங்​கள் கருத்​துக்​களைப் பகிர்ந்து கொண்​டனர்.

பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் ஒரு அப்​பாவி என்று குறிப்​பிட்ட சாதுக்​கள், அவர் தனது வாழ்​நாளை ராம் லல்லா சேவைக்​காக அர்ப்​பணித்​துள்​ளார். அவருக்கு சாதுக்​கள் உறு​துணை​யாக நிற்​பார்​கள் என்று தெரி​வித்​தனர்.

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத்ராய் குற்றமற்றவர்: ஆர்எஸ்எஸ், விஎச்பி, சாதுக்கள் கூட்டத்தில் அறிவிப்பு
மாதம் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ரயில்வே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in