மாதம் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ரயில்வே

மாதம் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ரயில்வே
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில் போக்​கு​வரத்​துக்​காக, மாதந்​தோறும் எவ்​வளவு மின்​சா​ரம் பயன்​படுத்​தப்படுகிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவை​யில் ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் எழுத்​துப்​பூர்​வ​மாகத் தாக்​கல் செய்த பதிலில் கூறிய​தாவது:

மின்​மய​மாக்​கலில் இந்​திய ரயில்​வே​யின் முன்​னேற்​றம் உலகளவில் மிக முக்​கிய​மான சாதனை​களில் ஒன்​று. இந்​திய ரயில்வே இப்​போது உலகின் மிகப் பரவலாக மின்​மய​மாக்​கப்​பட்ட பெரிய ரயில் அமைப்​பு​களில் ஒன்​றாகத் திகழ்​கிறது. சுவிட்சர்லாந்தில் ரயில்​கள் 100 சதவீதம் மின்​சா​ரத்​தில் இயங்​கு​கின்​றன. 99.6 சதவீதத்​துடன் இந்​தியா உலகள​வில் 2-வது இடத்​தில் உள்​ளது.

அனைத்து புதிய ரயில் பாதைகளும் மற்​றும் கூடு​தல் பாதை திட்டங்​களும் மின்​மய​மாக்​கலுடன் ஒப்​புதல் அளிக்​கப்​பட்டு கட்டப்பட்டு வரு​கின்​றன.

இந்​திய ரயில்​வே​யின் 19 மண்​டலங்​களில், 15 மண்​டலங்​கள் 100 சதவீத மின்​மய​மாக்​கலை அடைந்​துள்​ளன. மீத​முள்ள வடமேற்கு ரயில்​வே, வடகிழக்கு எல்​லைப்​புற ரயில்​வே, தெற்கு ரயில்​வே, தென்​மேற்கு ரயில்வே ஆகிய 4 மண்​டலங்​களில் மின்​மய​மாக்​கல் பணி​கள் இன்​னும் நடை​பெற்று வரு​கின்​றன.

மொத்​தம் உள்ள 17 மண்​டலங்​களில் ரயில்​களை இயக்​கு​வதற்​காக ஒவ்​வொரு மாத​மும் 295 கோடியே 70 லட்​சம் யூனிட் மின்​சா​ரம் பயன்​படுத்​தப்படுகிறது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

மாதம் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ரயில்வே
கால் இறுதியில் ராதிகா தோல்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in