பல்கலை. மீது தாக்குதல்: 26 ஏபிவிபி அமைப்பினர் கைது

பல்கலை. மீது தாக்குதல்: 26 ஏபிவிபி அமைப்பினர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் 'ஸ்பார்க்' என்ற பெயரில் தேசியக் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பிப்.28ம் தேதி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் மேடையில் ராணுவ வீரர்களை வன்முறையாளர்களாகவும், காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் நேற்று முன்தினம் அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழகப் பெயர்ப் பலகையை நொறுக்கியதுடன், கறுப்பு மை பூசினர். இது குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீஸார், 20 பேரை நேற்று கைது செய்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து, மேலும் சிலரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பல்கலை. மீது தாக்குதல்: 26 ஏபிவிபி அமைப்பினர் கைது
கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில் டிஎஸ்பி தலைமறைவு: விசாரணை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in