அசாம் முதல்வர் ஹிமந்த குவாஹாட்டியில் வாக்களித்தார்

அசாம் முதல்வர் ஹிமந்த குவாஹாட்டியில் வாக்களித்தார்
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடை​பெற்​றது. அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, குவாஹாட்​டி​யின் ஜலுக்​பாரி தொகு​தி​யில் 3-வது முறை​ போட்​டி​யிடு​கிறார்.

அவர் நேற்று காலை​தனது மனைவி ரினிகி புயான் சர்மா, 2 குழந்​தைகளான நந்​தில், சுகன்யா ஆகியோ​ருடன் ஜலுக்​பாரி பகு​தி​யில் உள்ள கரல் புனி​யாதி தொடக்​கப் பள்​ளிக்கு சென்று வாக்​களித்​தார்.

பின்னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், "ஒரு வாக்​காள​ராக நான் எனது கடமையை ஆற்​றி​யுள்​ளேன், அடுத்த 5 ஆண்​டு​களுக்கு தொடர் வளர்ச்​சியை கருத்​தில் கொண்டு வாக்​காளர்​கள் அனை​வரும் தங்​கள் கடமையை ஆற்​று​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​ட​ணிக்கு மக்​கள் மிகப் பெரிய வெற்​றியை தரு​வார்​கள் என நம்​பு​கிறேன்" என்​றார்.

தன்னை பற்​றி​யும் தனது மனை​வியை பற்​றி​யும் காங்​கிரஸ் சுமத்​தி​யுள்ள குற்​றச்​சாட்​டு​கள் குறித்த கேள்விக்​கு, "காங்​கிரஸ் எங்கே இருக்​கிறது, அதைப் பற்றி நான் கேள்​விப்​பட்​டதே இல்​லை" என்​றார்.

தனது மனை​வி​யின் பாஸ்​போர்ட்​டுகள் மற்​றும் வெளி​நாட்டு முதலீடு​கள் தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் பவன் கேரா எழுப்​பிய குற்​றச்​சாட்​டு​கள் குறித்து ஹிமந்தா கூறுகை​யில், "பவன் கேரா ஒரு ஓடிப்​போனவர். நான் ஏன் அவருக்​குப்​ பதிலளிக்​க வேண்​டும்​?" என்​றார்​.

அசாம் முதல்வர் ஹிமந்த குவாஹாட்டியில் வாக்களித்தார்
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in