மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் நிச்​சய​மாக ஆட்சி மாற்​றம் ஏற்படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸுக்​கும் பிர​தான எதிர்க்​கட்​சி​யான பாஜக​வுக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் ஹால்​டி​யா, அசன்​சோல், சியுரி ஆகிய பகு​தி​களில் நேற்று நடை​பெற்ற பாஜக பிரச்​சார கூட்​டங்​களில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேற்​கு​வங்​கத்தை ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், இளைஞர்​களின் கனவு​களை சிதைத்து வரு​கிறது. மாநிலம் முழு​வதும் வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. அரசு பணிக்கு ஆட்​சி​யாளர்​கள் லஞ்​சம் பெறுகின்​றனர். பாஜக ஆட்சி அமைக்​கும்​போது அரசு பணிக்​கான தேர்வு வெளிப்​படை​யாக நடை​பெறும். லஞ்​சம், கமிஷன் இன்றி தகு​தி​யின் அடிப்​படை​யில் இளைஞர்​களுக்கு அரசு பணி கிடைக்​கும்.

திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் மேற்​கு​வங்​கத்​துக்​குள் ஊடுரு​வல்​காரர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் நுழைந்து வரு​கின்​றனர். அவர்​களுக்கு தேவை​யான ஆவணங்​களை ஆளும் கட்சி வழங்​கு​கிறது. வாக்கு வங்கி அரசி​யலுக்​காக மதத்​தின் அடிப்​படை​யில் இடஒதுக்​கீடு வழங்​கப்​படு​கிறது. நிலக்​கரி மாபி​யா, மணல் மாபியா உள்​ளிட்ட சட்​ட​விரோத கும்​பல்​கள் புற்​றீசல் போல அதி​கரித்து வரு​கின்​றன.

தற்​போது கொடுங்​கோல் ஆட்சி நடை​பெறுகிறது. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கொடுங்​கோல் ஆட்​சியை அகற்ற மக்​கள் தயா​ராகி விட்​டனர். மேற்​கு​வங்​கத்​தில் நிச்​சய​மாக ஆட்சி மாற்​றம் ஏற்​படும் என்று அறு​தி​யிட்டு கூறுகிறேன். பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். அப்​போது புதிய யுகம் தொடங்​கும்.

இந்த நேரத்​தில் பாஜக​வின் சார்​பில் முக்​கிய வாக்​குறு​தி​களை அளிக்​கிறேன். நீதியை நிலை​நாட்டி நல்​லாட்​சியை வழங்​கு​வோம். ஊழல், குற்​றங்​களுக்கு எதி​ராக மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆட்சி நிர்​வாகம் சீர்​படுத்​தப்​படும். கடமை தவறாமல், பொறுப்​புணர்​வுடன் ஆட்சி நடத்​து​வோம். ஊழல், பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் தொடர்​பான வழக்​கு​கள் மீண்​டும் விசா​ரிக்​கப்​படும். மக்​களின் பணத்தை கொள்​ளை​யடித்த ஊழல்​வா​தி​கள் சிறை​யில் அடைக்​கப்​படு​வார்​கள்.

ஊடுரு​வல் முழு​மை​யாக தடுக்​கப்​படும். ஊடுரு​வல்​காரர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். தகு​தி​யுள்ள அகதி​களுக்கு மட்​டும் சட்ட பாது​காப்பு வழங்​கப்​படும். மேற்​கு​வங்க அரசு ஊழியர்​களின் நலன் கருதி 7-வது ஊதிய கமிஷனின் பரிந்​துரைகள் உடனடி​யாக அமல் செய்​யப்​படும். இரட்டை இன்​ஜின் ஆட்​சி​யால் மேற்​கு​வங்​கம் அதிவேக​மாக முன்​னேறும்.

தேர்​தலில் பாஜக​வுக்கு வாக்​களிக்க மக்​கள் தயா​ராக உள்​ளனர். மே 4-ம் தேதி திரிண​மூல் காங்​கிரஸின் ஆட்​சிக்​கு முற்​றுப்​புள்​ளி வைக்​கப்​படும்​. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in