வெளிநாட்டுக்குத் தப்பிய குற்றவாளி ஜார்ஜியாவில் கைது: ஹரியானா படைக்கு உதவிய இண்டர்போல், வெளியுறவுத் துறை, சிபிஐ

வெங்​கடேஷ் கர்க்

வெங்​கடேஷ் கர்க்

Updated on
1 min read

புதுடெல்லி: ஹரி​யா​னா​வின் அம்​பாலா மாவட்​டத்​தின் நாராயண்​கரைச் சேர்ந்​தவர் வெங்​கடேஷ் கர்க்​ (29). இவரது தலை​மை​யில் சுமார் 53 உறுப்​பினர்​களு​ட​னான குற்​றக் கும்​பல் ஹரி​யா​னா​வின் பல்​வேறு பகு​தி​களில் செயல்​பட்டு வந்​தது.

காவல்​ துறை விசா​ரணை​யின்​படி, அம்​பாலா, யமு​னாநகர், குருக்​ஷேத்​ரா, பஞ்ச்​குலா, சண்​டிகர் ஆகிய இடங்​களில் இந்த கர்க் கும்பலுக்கு எதி​ராக கொலை, கொலை சதி, துப்​பாக்​கிச் சூடு, மிரட்​டிப் பணம் பறித்​தல், சட்​ட​விரோத ஆயுதங்​கள் வைத்திருத்தல் என 34 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. நாராயண்​கரில் பகுஜன் சமாஜ் கட்சி தலை​வர் ஹர்வி​லாஸ் கொல்​லப்​பட்ட சம்​பவத்​தி​லும் கர்க் கும்​பலின் பெயர் அடிபட்​டது.

கடந்த டிசம்​பர் 10, 2024-ல், வெங்​கடேஷ் கர்க் டெல்​லி​யின் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் இருந்து ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு தப்​பி​னார். அங்​கிருந்து ஜனவரி 26, 2025 அன்று ஜார்​ஜியா நாட்​டுக்​குச் சென்​றார். இதற்​காக கர்க், போலி ஆவணங்​களை பயன்​படுத்தி பாஸ்​போர்ட்​டைப் பெற்​றுள்​ளார்.

இந்த வழக்கு ஹரி​யா​னா​வின் சிறப்பு அதிரடிப் படை(எஸ்​டிஎப்) ஒப்​படைக்​கப்​பட்​டது. இதையடுத்து கர்க்​கின் பாஸ்​போர்ட்டை ரத்து செய்த எஸ்​டிஎப், தேடும் முயற்​சி​யில் இறங்கி வெற்றி பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில் அவர் ஜார்​ஜி​யா​வில் கைது செய்​யப்​பட்டார்.பின்னர் நேற்று ஹரி​யா​னா​வின் எஸ்​டிஎப் அதி​காரி​கள், விமானம் மூலம் அவரை டெல்லி அழைத்து வந்​தனர்.

வெளி​நாட்​டுக்​குத் தப்​பியோடிய ஒரு குற்​ற​வாளியை அந்நாட்டுக்குச் சென்று ஹரி​யானா போலீ​ஸார் கைது செய்​வது இதுவே முதல்​முறை. ஜார்​ஜி​யா​விலிருந்து இந்​தி​யா​வுக்கு ஒரு குற்ற​வாளி, நாடு கடத்​தப்​பட்டு அழைத்து வரப்​படு​வதும் இதுவே முதல் முறை​யாகும். ஜார்​ஜி​யா​விலிருந்து வெங்​கடேஷ் கர்க் மீது, ‘லுக்​-அவுட்' மற்​றும் இண்​டர்​போல் மூலம் ‘ரெட் கார்​னர்’ நோட்டீசுகள் பிறப்​பிக்​கப்​பட்​டன.

சிபிஐ மூலம் இருப்​பிடத்தை உறுதி செய்​த​ பின், மத்​திய அரசு மூலம் அவரை நாடு கடத்தி அழைத்து வரு​வதற்​கான சட்ட நடை​முறை​கள் தொடங்​கப்​பட்​டன. ஜார்​ஜி​யா​வின் நீதித்​துறை மற்​றும் சட்ட அமலாக்க அமைப்​பு​களு​டன் தொடர்ச்​சி​யான தொடர்​பில் மத்​திய வெளி​யுறவுத்​ துறை இருந்​தது. சட்ட நடை​முறை​கள் பூர்த்தி செய்​யப்​பட்டு வெங்​கடேஷ் கர்க் இறு​தி​யாக இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளார். வெங்​கடேஷ் கர்கை பாது​காப்​பாக அழைத்​து வர கஜகிஸ்​தான்​ அரசும்​ பெரிதும்​ உத​வி உள்​ளது.

<div class="paragraphs"><p><em>வெங்​கடேஷ் கர்க்</em></p></div>
ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை: கேரளாவில் 72 மணி நேரத்தில் 1,000 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in