

புதுடெல்லி: கடந்த 2018-ல் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், யூடியூபர் துருவ் ராத்திக்கு எதிராக டெல்லி சாகேத் நீதிமன்றம் நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
‘ஐ சப்போர்ட் நரேந்திர மோடி’ முகநூல் பக்கத்தின் நிறுவனர் விகாஸ் பாண்டே, ‘பாஜக ஐடி செல் பாகம் 2’ என்ற வீடியோவில் துருவ் ராத்தி தன் மீது அவதூறு பரப்பியதாக வழக்குத் தொடர்ந்திருந்தார். ராத்திக்கு அனுப்பப்பட்ட சம்மன் மற்றும் வாரண்டுகளுக்கு அவர் ஆஜராகாததால், நீதித்துறை நடுவர் அனாம் ரயீஸ் கான் பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்தார். வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நடத்திய போராட்டத்தில் பங்கேற்க துருவ் ராத்தி அக்டோபரில் இந்தியா வந்தார்.
அக்டோபர் 8-ல் பெங்களூரு போராட்டத்தில் பங்கேற்ற அவர், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு முன்பாக அக்டோபர் 10-ல் குருகிராம் வீட்டில் டெல்லி காவல் துறையால் காவலில் எடுக்கப்பட்டு, அக்டோபர் 11-ம் தேதி அதிகாலை விடுவிக்கப்பட்டார்.