அரபு வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அரபு வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அரபு நாடு​களின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​கள் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தனர்.

இந்​தியா - அரபு நாடு​கள் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​களின் இரண்​டாவது கூட்​டம் டெல்​லி​யில் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அரபு நாடு​களின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​கள் டெல்லி வந்​துள்​ளனர். அவர்​கள் பிரதமர் மோடியை நேற்று சந்​தித்​தனர்.

இது குறித்து பிரதமர் அலு​வல​கம் விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா மற்​றும் அரபு நாடு​கள் மக்​கள் இடையே​யான தொடர்பு மிக பழமை​யானது மற்​றும் ஆழமானது என்​றும், இது இந்​தியா - அரபு நாடு​கள் இடையே​யான உறவை வலுப்​படுத்​துகிறது என பிரதமர் மோடி அரபு நாடு​களின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​களிடம் எடுத்து கூறி​னார்.

வரும் ஆண்​டு​களி​லும் வர்த்​தகம், முதலீடு, எரிசக்​தி, தொழில்​நுட்​பம், சுகா​தா​ரம் மற்​றும் இதர முக்​கிய துறை​களில் அரபு நாடு​களு​டன் கூட்​டாக செயல்​படு​வ​தில் இந்​தியா உறு​தி​யுடன் உள்​ளது என்​ப​தை​யும், இதன் மூலம் இரு​நாட்டு மக்​களும் பயனடைவர் எனவும் பிரதமர் மோடி கூறி​னார்.

பாலஸ்​தீன மக்​களுக்​காக தொடர்ந்து ஆதரவு தெரி​வித்து வரும் இந்​தியா காசா​வில் நடை​பெறும் அமைதி முயற்​சிகளை வரவேற்​ப​தாக​வும் பிரதமர் மோடி கூறி​னார். பிராந்​திய அமைதி மற்​றும் நிலைத்​தன்​மையை உரு​வாக்​கும் முயற்​சி​யில் அரபு நாடு​கள் முக்​கிய பங்​காற்​று​வதை​யும் பிரமதர் மோடி பாராட்​டி​னார். இவ்​வாறு பிரதமர் அலு​வல​கம் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அரபு வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு தொகுதியில் இ-சைக்கிள் விநியோகத்தில் கின்னஸ் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in