ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு தொகுதியில் இ-சைக்கிள் விநியோகத்தில் கின்னஸ் சாதனை

ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு தொகுதியில் இ-சைக்கிள் விநியோகத்தில் கின்னஸ் சாதனை
Updated on
1 min read

குப்பம்: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, தனது சொந்த தொகு​தி​யான குப்​பம் தொகு​தி​யில் 3 நாட்​கள் சுற்​றுப்​பயணம் செய்து வரு​கிறார். இதில் 2-ம் நாளான நேற்று பல்​வேறு வளர்ச்சி பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

மூத்த குடிமகன்​கள் (வீட்​டில் எத்​தனை பேர் இருந்​தா​லும்), கணவ​ரால் கைவிடப்​பட்ட பெண்​கள், விதவை​களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திற​னாளி​களுக்கு தலா ரூ.6 ஆயிரம், கடும் நோய்​களால் பாதிக்​கப்​பட்​டுள்​ளவர்​களுக்கு தலா ரூ.15,000 என ஒவ்​வொரு மாத​மும் சரி​யாக 1-ம் தேதி வழங்​கப்​படு​கிறது.

இதில் சந்​திர​பாபு நாயுடு தனது குப்​பம் தொகு​தி​யில் உள்ள பயனாளி​களுக்கு நேரில் இந்த உதவி தொகையை அவர​வர் வீடு​களுக்கே சென்று வழங்​கி​னார்.

அதன் பின்​னர், குப்​பம் தொகுதி சாந்​திபுரத்​தில் மகளிர் சுய உதவி குழு​வினருக்கு மொத்​தம் 5,555 இ-சைக்​கிள்​களை வழங்​கி​னார். அப்​போது சந்​திர​பாபு, மகளிர் உட்பட அனை​வரும் சுமார் 3 கி.மீ தூரம் பொதுக்​கூட்ட மேடை வரை சைக்கிளில் வந்​தனர். 5555 இ-சைக்​கிள்​கள் விநி​யோகம், 3 கி.மீ. தூரம் வரை அனை​வரும் அதனை ஓட்​டியபடி வந்​தது என்​பது கின்​னஸ் சாதனை என கூறி, அங்​கிருந்த கின்​னஸ் புத்தக பிர​தி​நி​தி​கள் அதற்​கான சான்​றிதழை வழங்​கி​னார்.

ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு தொகுதியில் இ-சைக்கிள் விநியோகத்தில் கின்னஸ் சாதனை
ஹைதராபாத் ஏடிஎம்மில் பணம் செலுத்த சென்றவரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.6 லட்சம் கொள்ளை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in