ரூ.3.32 லட்சம் கோடியில் ஆந்திர பட்ஜெட் தாக்கல்

ரூ.3.32 லட்சம் கோடியில் ஆந்திர பட்ஜெட் தாக்கல்
Updated on
1 min read

அமராவதி: ஆந்​திர மாநில நிதி அமைச்​சர் வி.கிஷோர் நேற்று சட்​டப்​பேர​வை​யில் ரூ.3,32,205 கோடி​யில் 2026-27 ஆண்​டுக்​கான பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார்.

இதில், ரூ.6 ஆயிரம் கோடி அமராவதி தலைநகர பணி​களுக்​காக​வும், மின்​வாரி​யத்​திற்கு ரூ.13,934 கோடி​யும், சாலை, துறை​முகம் மற்​றும் விமான நிலை​யங்​கள் அமைக்க ரூ.13,546 கோடி​யும், தொழிற்​சாலை பணி​களுக்கு ரூ.3,161 கோடி​யும், விசாகப்​பட்​டினம் வளர்ச்சி பணி​களுக்கு ரூ.28,000 கோடி​யும், ராயலசீமா குளோபல் தோட்​டக்​கலை கிளப்​புக்கு ரூ.30,000 கோடி​யும், வேளாண்மை மற்​றும் அதன் துணை துறை​களுக்கு ரூ. 13,598 கோடி​யும், போல​வரம் அணைக்​கட்ட ரூ.6,105 கோடி​யும், உள்​துறைக்கு ரூ.9,165 கோடி​யும், மதிய உணவு திட்​டத்​திற்கு ரூ.2,161 கோடி​யும், பள்​ளி​கல்​வித் துறைக்கு ரூ.32,308 கோடி​யும் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​ட​தாக அறிவிக்​கப்​பட்​டது.

டிஜிட்​டல் கைதுகள், ஆன்​லைன் மோசடிகளை முழு​மை​யாக ஒழிக்க ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சைபர் கிரைம் காவல் நிலை​யங்​கள் அமைக்​கப்​படும் என பட்​ஜெட் கூட்​டத்​தில் அறிவிக்​கப்​பட்​டது. பெண்​கள் பாது​காப்​புக்கு ‘சக்​தி’ மொபைல் செயலி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் புகார் செய்த 7 நிமிடங்​களில் போலீ​ஸார் சம்பவ இடத்​திற்கு சென்று வி​சா​ரணை நடத்​து​வர் என்​றும் நிதி அமைச்​சர்​ தெரி​வித்​தா​ர்​.

ரூ.3.32 லட்சம் கோடியில் ஆந்திர பட்ஜெட் தாக்கல்
லோர்கன் டக்கர் 94 ரன்கள் விளாசல்: அயர்லாந்து அணி அபார வெற்றி - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in