அந்தமானில் ரூ.36,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

அந்தமானில் ரூ.36,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு
Updated on
1 min read

விஜயபுரம்: அந்தமான் தீவு அருகே கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சென்ற மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து சோதனை செய்தனர்.

அதில் 1,500 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மெதாம்ஃபெட்டமின் போதைப் பொருள் என ஆய்வில் தெரிய வந்தது. 6,000 கிலோ எடையுடன் இருந்த இந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.36,000 கோடி. இதையடுத்து அந்த படகில் இருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அந்தமான் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், 6 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை அழிக்கும் பணி காவல் துறை உயரதிகாரிகள் முன்னிலையில் தொடங்கின.

அந்தமானில் ரூ.36,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு
பாக். வீரர்களுக்கு அபராதம் இல்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in