ரூ.182 கோடி ஜிகாதி போதைப் பொருள் பறிமுதல்: இந்தியாவில் முதல்முறை என அமித் ஷா தகவல்

மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக ரூ.182 கோடி மதிப்பிலான ஜி​காதி போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ‘எக்​ஸ்' தளத்​தில் மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நமது முகமை​கள் ஆபரேஷன் ரேஜ்பில் மூலம் வரலாற்​றிலேயே முதல் முறை​யாக ரூ.182 கோடி மதிப்​புள்ள, ஜிகாதி போதைப் பொருள் என்று அழைக்​கப்​படும் கேப்​டகனை பறி​முதல் செய்​துள்ளன. இந்த போதைப்பொருள் டெல்லி மற்றும் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்​திய கிழக்கு நாடு​களுக்கு அனுப்​பப்பட இருந்த இந்த போதைப் பொருள் கைப்​பற்​றப்​பட்​டு, சிரியாவை சேர்ந்த ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இது, போதைப் பொருளுக்கு எதி​ரான நமது பூஜ்ஜிய சகிப்​புத்​தன்மை கொள்​கைக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டாகும்.

இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் அல்​லது நமது நாட்டை ஒரு வழித்​தட​மாக பயன்​படுத்தி வெளி​நாடு​களுக்கு கொண்டு செல்​லப்​படும் ஒவ்​வொரு கிராம் போதைப் பொருளை​யும் நாம் கைப்​பற்​று​வோம். துணிச்​சல் மற்​றும் விழிப்​புடன் செயல்​பட்ட என்​சிபி வீரர்​களுக்கு எனது பாராட்​டு​கள். இவ்​வாறு அமித் ஷா கூறி​யுள்​ளார்.

பெயர்க் காரணம்: கேப்​டகன் என்​பது ஃபெனெத்​திலின் என்ற செயற்கை ஊக்க மருந்​தின் வணி​கப் பெய​ராகும். இது 1960-களில் கவனக்​குறை​பாடு, தூக்​கமின்மை சிகிச்​சைக்​காக உரு​வாக்​கப்​பட்​டது. ஆனால் அதன் அடிமை​யாக்​கும் பண்​பு​கள் மற்​றும் தவறாகப் பயன்​படுத்​தும் சாத்​தி​யக்​கூறுகள் காரண​மாக 1980-களில் சர்​வ​தேச அளவில் தடை செய்​யப்​பட்​டது.

சிரி​யா​வில் நடந்த உள்​நாட்​டுப் போரின் போது ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தீவிர​வாத குழுக்​கள், தங்​கள் படை​யினரின் சோர்வை நீக்​க​வும் விழிப்​புணர்வு மற்​றும் துணிச்​சலை அதி​கரிக்​க​வும் இதை பயன்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இதன் காரண​மாகவே இது ஜிகாதி போதைப் பொருள் என்று அழைக்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா</p></div>
ஒலிம்பிக் போட்டி நடத்துவது இந்தியாவின் ஆசை: நெதர்லாந்து இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in