மேலும் 114 ரஃபேல் போர் விமானம் வாங்க மார்ச்சுக்குள் ஒப்பந்தம்: விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தகவல்

மேலும் 114 ரஃபேல் போர் விமானம் வாங்க மார்ச்சுக்குள் ஒப்பந்தம்: விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: விமானப்​படை தினத்தை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர் சந்​திப்​பில் விமானப்​படை தளபதி ஏர் சீஃப் மார்​ஷல் ஏ.பி. சிங் பேசி​ய​தாவது:

பிரான்​ஸிடம் இருந்து மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​களை வாங்​கு​வதற்​கான பல்​நோக்கு போர் விமானத் திட்​டம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

விலை நிர்​ண​யம் உள்​ளிட்ட முக்​கிய அம்​சங்​கள் குறித்து தற்போது விவா​திக்​கப்​பட்டு வரு​கின்​றன. அனைத்​தும் திட்​ட​மிட்​டபடி நடை​பெற்​றால், நடப்பு நிதி​யாண்​டின் இறு​திக்​குள் (மார்ச் 27) இந்த ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய முடி​யும்.

இந்​திய விமானப்​படை​யில் போர் விமானப் படைப்​பிரிவு​களின் பலத்தை அதிகரிக்க அடுத்த சில ஆண்​டு​களில் ஆண்​டு​தோறும் 36 முதல் 40 போர் விமானங்​களை விமானப்​படை​யில் சேர்க்க வேண்​டிய தேவை உள்​ளது.

சுமார் 20 ஆண்​டு​களாக நிலு​வை​யில் இருந்த 114 ரஃபேல் விமானக் கொள்​முதல் திட்​டத்​துக்கு இந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் முதல்​கட்ட ஒப்​புதல் கிடைத்​தது. பிரான்ஸ் அரசுடன் நேரடி ஒப்​பந்​தம் மூலம் இது மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்​திய விமானப்​படை​யிடம் ஏற்​கெனவே 36 ரஃபேல் விமானங்​கள் உள்​ளன.

புதிய 114 விமானங்​களும் சேர்ந்​தால், மொத்த ரஃபேல் விமானங்கள் எண்​ணிக்கை 150 ஆக உயரும். இவ்​வாறு அவர் கூறினார்​.

மேலும் 114 ரஃபேல் போர் விமானம் வாங்க மார்ச்சுக்குள் ஒப்பந்தம்: விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தகவல்
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in