

ஜாஷ்பூர்: சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் தனியார் விமானம் ஒன்று மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.
தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஒற்றை இன்ஜின் சிறிய ரக விமானம் ஒன்று சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் நேற்று பறந்து சென்றது. சுமார் 30 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து சென்ற விமானம், மரத்தில் மோதி கீழே விழுந்ததாக விமான விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 2 பைலட்டுகளும் உயிரிழந்தனர். விமான விபத்து நடைபெற்ற இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.