அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜெனரல் சுப்ரமணியம்

செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜெனரல் சுப்ரமணியம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுப்ரமணி, “இன்று இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நமது அக்னி வீரர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். அனைத்து அக்னி வீரர்களும் இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகச் சேருவதற்கான வழிவகையை மத்திய அமைச்சரவை உருவாக்கி உள்ளது.

அக்னிபாத் திட்டம் ஜூன் 14, 2022-ல் தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, அக்னி வீரர்களின் செயல்பாடு தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், இத்திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் தொகுதியைச் சேர்ந்த அக்னி வீரர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்களின் பணித்திறன் குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதியின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் வழக்கமான ராணுவ படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்கள் ஒழுக்கமான, ஊக்கமுள்ள இளைஞர்களாக மீண்டும் சமூகத்துக்கு திரும்புவார்கள் என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, அந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த 2 ஆண்டு காலம் முடிந்த பிறகு, விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரிவித்தார்.

2022ல் அக்னி வீரர்கள் ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டபோது, அவர்களின் பணிக்காலம் குறைவாக இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பிஹாரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அக்னி வீரர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இத்திட்டத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

<div class="paragraphs"><p>செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும்&nbsp;ஜெனரல் சுப்ரமணியம்</p></div>
அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை என்பதையே இடைக்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது: ஈரான்

X