ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை

நடிகை ட்விஷா சர்மா

நடிகை ட்விஷா சர்மா

Updated on
1 min read

புதுடெல்லி: தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின் பெற்றோர் கூறிய தொடர் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதற்கிடையில் தலைமறைவான அவரது கணவர் சமரத் சிங் ஜபல்பூரில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை போபால் விரைந்தனர்.

<div class="paragraphs"><p><em>நடிகை ட்விஷா சர்மா</em></p></div>
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in