பிஹாரில் பாலம் கட்​டும்​போது விபத்து: 8 தொழிலாளர்கள் படுகாயம்

பிஹாரில் பாலம் கட்​டும்​போது விபத்து: 8 தொழிலாளர்கள் படுகாயம்
Updated on
1 min read

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்​டத்​தில் இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் கீழ் நான்கு வழி நெடுஞ்​சாலைத் திட்​டப்​பணி​கள் நடந்து வரு​கின்​றன. அதன் ஒரு பகு​தி​யாக லால் கஞ்ச் பகு​தி​யில் மேம்பாலம் கட்​டப்​பட்டு வரு​கிறது. நேற்று அங்கு வழக்​கம்​போல் பணி​கள் நடந்து கொண்​டிருந்​தன. அப்​போது கட்டுமான பணி​களுக்​காக நிறுத்​தப்​பட்​டிருந்த பீம் லாஞ்​சர் எனப்படும் ராட்சத இயந்​திரம் திடீரென சரிந்​தது. அதன் அடி​யில் தொழிலா​ளர்​கள் சிக்​கினர்.

இதையடுத்து உடனடி​யாக மீட்பு பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டன. காயம் அடைந்த 8 தொழிலா​ளர்​கள் மீட்​கப்​பட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களில் 2 பேர் மேல்​ சிகிச்​சைக்​காக மாவட்ட அரசு மருத்​து​வ​மனைக்கு மாற்றப்​பட்​டனர். அவர்​களின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

பிஹாரில் பாலம் கட்​டும்​போது விபத்து: 8 தொழிலாளர்கள் படுகாயம்
ஏமன் துறைமுகத்தை கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் பதற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in