இளம் வயதில் பெரிய சாதனை: அபிஜித் பற்றி தாய் அனிதா கருத்து

அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா

அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா

Updated on
1 min read

புதுடெல்லி: என் மகன் இளம் வயதில் மிகப்​பெரிய சாதனையைச் செய்​துள்​ளார் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித்​தின் தாய் அனிதா திப்கே நேற்று கூறிய​தாவது: இப்​போது நான் மிக​வும் மகிழ்ச்​சி​யடைகிறேன். பெரு​மைப்​படு​கிறேன். அபிஜித் தாக்​கப்​பட்ட போது சில சமயங்​களில் பயந்​தேன். அவனுக்கு என்​னா​வாகுமோ என்று கவலைப்​பட்​டுக் கொண்டே இருந்​தேன்.

அவர்​கள் அவனை தாக்​கி​னார்​கள். எனக்கு மிக​வும் வேதனை​யாக இருந்​தது. என்​னால் தூங்க முடிய​வில்​லை. அதி​காலை மூன்று அல்லது நான்கு மணி வரை விழித்​திருந்​தேன். என்​னால் சாப்​பிட​வும் முடிய​வில்​லை.

ஜூன் 7-ம் தேதி முதல் வீட்​டில் எதை​யும் செய்​யத் தோன்​ற​வில்​லை. அபிஜித் ஒரு அற்​புத​மான பணி​யைச் செய்​துள்​ளார். அவர் மிக​வும் இளை​ய​வர், ஆனாலும் இவ்​வளவு பெரிய சாதனையை செய்​துள்​ளார். அவரை நினைத்து நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா</p></div>
நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்: ராஜினாமா பற்றி தர்மேந்திர பிரதான் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in