நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்: ராஜினாமா பற்றி தர்மேந்திர பிரதான் விளக்கம்

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

Updated on
2 min read

புதுடெல்லி: தற்​போதைய சூழ்​நிலையை தேச விரோத சக்​தி​கள் தங்​களுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக் கூடாது. நமது இளைஞர்​கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்​ளக் கூடாது என்​பதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​தேன் என்று தர்​மேந்​திர பிர​தான் தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். இதுதொடர்​பாக அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக மாணவர்​கள், ஆசிரியர்​களின் நலனுக்​காக​வும் கல்வி சீர்​திருத்​தத்​துக்​காக​வும் என்னை முழு​மை​யாக அர்ப்​பணித்​துள்​ளேன். அனை​வரை​யும் உள்​ளடக்​கிய, தொலைநோக்​குப் பார்வை கொண்ட வலு​வான கல்வி முறையே வலிமை​யான தேசத்​தின் அடித்​தளம் என்று நம்​பு​கிறேன். இளைஞர்​களின் லட்​சி​யங்​கள், உணர்​வு​கள், நியாய​மான எதிர்​பார்ப்​பு​களை நான் மதிக்​கிறேன். இளம் தலை​முறை​யின் கனவு​களை நனவாக்​கு​வது நமது தார்​மிகக் கடமை ஆகும்.

கடந்த மே 3 -ம் தேதி நடை​பெற்ற நீட் நுழைவுத் தேர்​வில் முறை​கேடு​கள் கண்​டறியப்​பட்​டன. மத்​திய அரசு உடனடி​யாக நடவடிக்கை எடுத்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்​டது. நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. மேலும் அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்​படை​யில் (சிபிடி) தேர்வை நடத்​த​வும் முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

இந்த விவகாரத்தில் முதல் நாளில் இருந்தே முழு பொறுப்​பை​யும் நான் ஏற்​றுக் கொண்​டேன், எந்​தச் சூழ்​நிலை​யிலும் நான் பின்​வாங்​க​வில்​லை. திறமை​யான மாணவர்​களின் எதிர்​காலம் சமூக விரோத கும்​பல்​களால் பாதிக்​கப்​படக் கூடாது. எந்​தவொரு மாணவருக்​கும் அநீதி நடக்​கக் கூடாது என்​ப​தில் மிக​வும் உறு​தி​யாக இருந்​தேன். கடந்த ஜூலை 16 -ம் தேதி நீட் மறு​தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. இதில் ஏழ்​மை​யான பின்​னணி​யைச் சேர்ந்த மாணவர்​கள் வெற்றி பெற்​றுள்​ளனர்.

கடந்த 10 நாட்​களில் நடந்த நிகழ்​வு​களால் நான் மிக​வும் வருத்​தமடைகிறேன். இது எனது கவுர​வம் சம்​பந்​தப்​பட்ட விஷ​யம் அல்ல. இந்​தி​யா​வின் இளைஞர் சக்​தி​யே, நாட்​டின் உண்​மை​யான பலம். நமது இளைஞர்​கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்ள நான் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டேன்.

தற்​போதைய சூழ்​நிலையை தேச​விரோத சக்​தி​கள் தங்​களுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக் கூடாது. நாட்​டின் ஒற்​றுமை பேணப்பட வேண்​டும். ஒரு மாணவரின் எதிர்​காலம்​கூட சட்​டச் சிக்​கல்​களால் பாதிக்​கப்​படக் கூடாது. நமது பிள்​ளை​கள் தங்​கள் நேரத்​தைப் படிப்​பில் செல​விட வேண்​டும். தொழில் துறை​களில் கவனம் செலுத்த வேண்​டும். இவற்​றைக் கருத்​தில் கொண்டு பிரதமர் நரேந்​திர மோடிக்கு எனது ராஜி​னாமா கடிதத்தை அனுப்பி உள்​ளேன்.

பிரதமர் மோடி​யின் வழி​காட்​டு​தலுக்​கும், தொடர்ச்​சி​யான ஆதர​வுக்​கும் எனது மனமார்ந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். என்​னுடன் பணி​யாற்​றிய அனை​வருக்​கும் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். தேசத்​துக்கு சேவை செய்​வதே எனது வாழ்​வின் லட்​சி​யம். இளைஞர்​களின் லட்​சிய கனவு​களை நிறைவேற்​று​வதற்​காக என்னை அர்ப்​பணித்​துக்​ கொள்​வேன்​. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>தர்மேந்திர பிரதான்</p></div>
எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in