Published : 23 May 2023 07:34 PM
Last Updated : 23 May 2023 07:34 PM

டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் வெளியிடப்படும்: மத்திய இணை அமைச்சர் தகவல்

மும்பை: டிஜிட்டல் இந்தியா மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதா அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "இந்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவும், அதன் பிறகு இந்த சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஓர் அரசாக, ஓர் அமைச்சகமாக இதற்கான பணிகளை நாங்கள் விரைவுபடுத்துவோம். நாட்டில் உள்ள சட்டங்களின் அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் இருக்கும்" என்று சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x