Published : 20 Sep 2017 01:44 PM
Last Updated : 20 Sep 2017 01:44 PM

முதல்வர் தலைமையிலான திறப்பு விழாவுக்கு ஒருநாள் முன்னதாக இடிந்த பிஹார் கால்வாய்

Portion of canal collapses in Bihar a day before inauguration

பிஹாரின் பகல்பூர் மாவட்டத்தில் ரூ.828 கோடி செலவில் கட்டப்பட்ட கால்வாயின் ஒரு பகுதி திறப்பு விழாவுக்கு ஒருநாள் முன்னதாக இடிந்துள்ளது.

படேஸ்வர்ஸ்தன் கங்கை கால்வாய் திட்டத்தின் கீழ் சுமார் 11 கி.மீ. நீளத்தில் 40 ஆண்டு கால உழைப்பில் உருவாக்கப்பட்டது இந்தக் கால்வாய். இதனை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை அன்று திறந்துவைப்பதாக இருந்தது. அந்த சூழ்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று கால்வாயின் ஒரு பகுதி இடிந்துள்ளது.

திறப்பு விழாவுக்கு முன்னதாக சோதனை முறையில் கால்வாயில் தண்ணீர் விடப்பட்டது. அப்போது கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களுக்காக தனது பயணத்தை ரத்து செய்வதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், ''தண்ணீர் முழு திறனில் இருந்து வெளியேறியதால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள், மோசமான கட்டுமானம் காரணமாகவே கால்வாய் உடைந்ததாகக் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில் ஒரு வாரத்தில் உடைப்பு சரிசெய்யப்பட்டு, திறப்பு விழா நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x